பக்கம்:தமிழ் உரை நடை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும் 21 நூற்ருண்டுக்கும் இடையில் வாழ்ந்த இவர்கள் தமிழில் நூல்களுக்கு உரை எழுதுவதன் மூலம் உரைநடையை வெளியிட்டு வளர்த்தார்கள் என்னலாம். ஏறக்குறைய இக்காலத்திலேயே வேருெரு வகையில் உரைநடை வளர்ந்தது என்னலாம், அதுதான் கல்வெட்டு முறை. பல்லவர் காலத்திலேயே செப்புப் பட்டயங்கள் தோன்றி விட்டன என்ருலும், தெளிந்த நல்ல நடையில் தோன்றிய கல்வெட்டுக்களின் காலம் பிற்காலச் சோழ பாண்டியர் காலமேயாகும். அக்கல் வெட்டுக்களில் ஒரு சில பகுதிகள் ஆசிரியப்பா வெனும்படி பா நடையில் அமைகின்றன என்ருலும், பெரும்பாலும் உரை நடையா லேயே அமைந்தன என்னலாம். வாழ்ந்த அரசர் தம் வரலாற்று வழி, போர், வெற்றி முதலியன பற்றிய பகுதிகள் அகவல் முறையில் பலவிடங்களில் அமைகின் மன. எனினும், ஒருசில உரைநடைகளாகவே அமைகின் றன. மற்றும் கல்வெட்டுக்களின் பிற்பகுதிகளில் வரும் நன்கொடைகள் பற்றிய வாசகங்கள் அனைத்தும் உரை கடையிலேயே அமைந்து உள்ளன. கல்வெட்டுக்களில் பழையன பெரும்பாலும் உரைநடையா லாகியவைகளே. இடைக்காலத்தில் தமிழொடு ஆரியமும் கலந்து வழங்கி வந்தது. வடமொழிக் கா வி யங் க ள் பல இடைக்காலத்தில் தமிழில் மொழி பெயர்க்கப் பெற்றன. சொற்களும் வடமொழியிலிருந்து அப்படியே எடுத்தாளப் பெற்றன. உரைநடையே இருமொழியும் கலந்து வழங்க வளர்ந்து வந்தது. அந்த உரைநடையை ‘மணிப் பிரவாள கடை' என்பர். மணியும், பவளமும் கலந்து கோத்தாற் போன்று இருமொழிகளும் கலந்து கின்று பொருள் விளக்கி நின்றமையின், இப்பெயர் பெற்றது என்பர். எனினும், இந்நடை காட்டில் நன்கு ஊன்றி வளரவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/30&oldid=874601" இலிருந்து மீள்விக்கப்பட்டது