பக்கம்:தமிழ் உரை நடை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தமிழ் உரை நடை வளர்கின்றது. அதிலும் சிறபபாக உரைநடை நூல்களே அதிகம். ஆனல் அனைத்தும் என்றும் போற்றக் கூடிய இலக்கியப் பெட்டகங்களாய் இருக்கின்றன என்று கூற. முடியாது. மக்கள் மனமறிந்து அவைகளைப் பயில்வதால் இன்பம் தருகின்ற வழியில் பல புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. உயர்ந்த, சங்க இலக்கியம் தொட்டுப் பல பாட்டு இலக்கியங்களே எளிய உரைநடையில் எழுதி மக்களை உணரவைக்கின்றனர் நல்லாசிரியர் சிலர். சிலர் ஆங்கிலம் முதலிய மேலே நாட்டு மொழிகளிலிருந்து பலப்பல கதைகள், கட்டுரைகள் முதலிய வற்றை நல்ல உரைநடையில் மொழி பெயர்க்கின்றனர். இந்திய நாட்டு மொழிகளாகிய மராத்தி, வங்காளம் போன்ற வற்றுள் அண்மையில் வெளிவந்த பலபுதினங்கள் தமிழில் உரை நடையில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இவ்வாறு பல வகையில் இந்த நூற்ருண்டின் இடைக்காலம் தமிழ் உரை கடை வளர்ச்சியின் பொற்காலம் என்னுமாறு விளங்கு, கின்றது. இவற்றின் விரிவையெல்லாம் நூல்வழி ஆங் காங்குக் காண்போம். இவ்வாறு தொல்காப்பியர் காலம் தொட்டு இன்று: வரை வளர்ந்த தமிழ் உரைநடையைத் தனித்தனிக் கால எல்லேயில் கின்று ஆராய்வதன் முன் உரைநடை என்பது. என்ன என்பதையும், அதுபற்றி இன்றைய மேலைநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறுவன யாவை என்பதையும் காணல் ஏற்புடைத்து என்று எண்ணி, அத்துறையில் சிறிது நேரம், கருத்தைச் செலுத்த நினைக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/35&oldid=874611" இலிருந்து மீள்விக்கப்பட்டது