பக்கம்:தமிழ் உரை நடை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது உரை நடை! 33 "எனினும், உரை நடை என்பது கட்டுக்கடங்காது பேசும் அல்லது எழுதும் சாதாரண எல்லா வசனங்களையும் கொள்வதாகாது. உரைநடை வாக்கியங்கள் இழுமென் மொழியால் நல்ல ஒழுகிசை நடையால், தொடர் நலமுடன் ஓசை உணர்த்தும் நெறியான், நன்கு வளர்ச்சியுற்ற தெள்ளிய கடையில் தெளிந்து செல்லுவனவாக அமையவேண்டும். மொழிக்கு இன்றியமையாத பெயர் வினைகளுடன் சேரும் உரிச்சொற்களின் தகுதியும் அளவறிந்து அவற்றைச்சேர்த்து வழங்கும் முறையும் உரைநடையில் வரையறை செய்யப் பெறல் வேண்டும். தேவையற்ற சிலவற்றை விட்டொழி தலும் உரைநடைக்கு இன்றியமையாதது. எனவே, உரை நடை என்பது செய்யுள் விதிகளுக்கு விளக்காய் கின்று இலக்கிய நலம் கெடா வகையில் மக்கள் உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளே உலகுக்கு எடுத்துக் காட்டப் பயன்படுவது என்று கொள்ளல் பொருந்தும்.” அது மிக்க எளிமை வாய்ந்த ஒன்று என்பதையும் நாள்தோறும் உள்ள பேச்சு வழக்குக்கு ஏற்றதென்பதையும் அறிஞர் உணர்வர்." இந்த ஆங்கில உரை விளக்கத்தை வைத்துக்கொண்டு நாம் முன்னே தமிழில் கண்ட விளக்கங்களை ஒப்பு நோக்கின் உண்மை நன்கு விளங்கும். எம்மொழியிலா யினும் அறிஞர் கருத்துக்களின் உண்மைகளே கேரிய முறையில் கண்டு உணர்த்துவார்கள் என்பதற்கு இத ளிைனும் வேறு சான்று வேண்டுங் கொல்! எனவே, உரை கடை என்பது மக்கள் உள்ளத்தில் தோன்றிய எண்ணங் களே உருவாக்கித் தருவது. அது பாட்டின் கடைக்கு மாறுபட்டதாயினும், ஓசை உடையதாகிய செய்யுள் நலப் பண்புடன் கூடி, உரைச் செய்யுள்' என்னுமாறு சிறப்பது. 1. En. Britanica. Vol. 18. pp. 591 and 592. 2. The Critical Sence by James Reeveso p. 22.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/42&oldid=874627" இலிருந்து மீள்விக்கப்பட்டது