பக்கம்:தமிழ் உரை நடை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தமிழ் உரை நடை பாட்டு மட்டுமன்றி, உரைநடையும் வளர்ந்திருந்தது என்பது நன்கு தெரிகிறது. எனவே, தொல்காப்பியர் காலமும் மேலே காட்டு அகஸ்தஸ் (Augustus) காலமும் ஏறக்குறைய ஒன்ருய் இருக்கலாம் எனக் கொள்ளல் பொருங் தும். இந்த கேரிய முறையைக் கைவிட்டுச் சில தமிழர்கள் தொல்காப்பியரைக் கிறிஸ்துவுக்குப்பின் கொண்டுவர முயன்று அரும்பாடு படுகிருர்கள். தமிழ் வாழ்வின் கால எல்லேயைக் குறுக்கி, அதன்வழியே தமிழ் முதல் நூல்களே யெல்லாம் பிற மொழிகளின் வழி வந்தன என்று கிலே நாட்டச் சிலர் நினைப்பதால், இத்தவறுகள் நேர்கின்றன. எப்படியாவது தங்கள் கொள்கையை நிலைநாட்ட வரலாறு மறந்து, வாழ்ந்த பழைமையை மறைத்து, எதேதோ செய்ய கினைக்கின்றனர். அவ்வாறு அவர்கள் செய்யும் செயலுக்கு மாறுபாடாக, தமிழிலக்கியம் இன்றைக்கு 2500 ஆண்டு களுக்கு முன்பே சிறந்து இருந்தது என்பதைத் தமிழர் மேலே நாட்டாரோடு கொண்ட தொடர்பு நன்கு விளக்கு கிறது. தொல்காப்பியரைக் காலத்தால் பிற்பட்டவர் எனக் கூறுபவர், ஒன்று யவன கிரேக்க நாடுகளுடன் தமிழ் நாட்டுத் தொடர்பே இல்லை என்று சொல்ல வேண்டும்: அல்லது தொல்காப்பியம் உள்ளவாறு இன்றைக்கு மூவா யிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். முன்னது வரலாற்ருலும் இலக்கியங் களாலும் பலவாறு ஆராய்ந்து முடிவு செய்யப்பட்டமையின் அக்கொள்கையை மறுக்க இயலாது. மறுப்பின், இலக் கியங்களும், மொழி ஆராய்ச்சிகளும், வரலாறும் இல்லை யாகவே கொள்ள வேண்டும். இது நடவாத ஒன்றே. எனவே, பின் கூறியபடி தொல்காப்பியர் காலம் இலக்கியம் செழித்தோங்கிய காலமாகிய இன்றைக்கு இரண்டாயிரத்து ஐநூறுஆண்டுகளுக்கு முற்பட்ட காலமே எனக் கொள்ளு தலே அறிவுடைமையாகும். இது கிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/49&oldid=874640" இலிருந்து மீள்விக்கப்பட்டது