பக்கம்:தமிழ் உரை நடை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது உரை நடை? 41 இன்னும் மேலே நாட்டு அறிஞர் சிலர் காட்டும் உரை நடை விளக்கங்களைக் காணலாம். இலக்கியத்திறய்ைவுத் துறையில் வல்லவர் வில்லியம் ஹென்றி ஹட்ஸன் என்பார். அவர் இலக்கியத்தைப் பல்வேறு துறைகளாகப் பகுத்து ஆராய்கின்ருர். அவற்றுள் ஒருபகுதி உரைநடை உரை நடை என்னும்போது மேலே நாட்டு அறிஞர்களுள் பெரும் பாலாருக்குப் பெருங்கதைகளும், சிறுகதைகளும், நாடக முமே முன் கிற்கின்றன. ஆகவே, அவர்களுடைய ஆராய்ச்சி களும் அத்துறையிலேயே செல்லுகின்றன. சிறப்பாக ஆங்கிலமொழியில் பிற்காலத்தில் தோன்றிய பெரும் பான்மையான உரைநடை நூல்கள் நவீனங்களாகிய (நாவல்கள்) கதைகளாகவே உள்ளமையின், அவர்கள் கருத்து அந்நெறியில் சென்றது வியப்பன்று. ஆனல், தமிழில் உரைநடை வெறுங் கதையாகமட்டும் செல்லாது பல வகையிலும் பயில்கின்றது. அதைப் பின்னர்க் காண்போம். கதை வாயிலாக உரைநடையைக் காணும் ஹட்ஸன் அவர்கள் உரைநடையைப் பற்றி அதிகம் கூறவில்லை என்ருலும், இரண்டொரு கருத்துகளைத் தெளித்துச் சென்றிருக்கிரு.ர். உரைநடையையும் நாடகத்தையும் ஒப்பிட்டுக் காட்டி, உரை நடை மிக எளிமையானது என்கிருர். உரை நடைக் கதை நூல்கள். சிறியனவாயி னும் பெரியனவாயினும், அமைப்பு, பாத்திரங்கள் நிலை. அவற்றின் பேச்சு முறை. செயலாற்றலின் காலமும் இடமும் கடந்த கிலே, கடைப் போக்கு, வாழ்க்கைக்குத் தேவையான உண்மையை உணர்த்தும் தன்மை ஆகிய வற்றை முக்கியமாகக் கொண்டவையாக இருக்க வேண்டும் என்கின்ருர். இவ்வாறு உரை நடை நூல் 1. William Henry Hudson - 1. An Introduction to the Study of Literature, p. 130. 2. ibid. 131. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/50&oldid=874707" இலிருந்து மீள்விக்கப்பட்டது