பக்கம்:தமிழ் உரை நடை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது உரை நடை? 432, -வாழ்ந்த அறிஞர்கள் எழுதி வைத்திருக்கும் இலக்கியங்' களே இலக்கணங்களுக்கு அடிப்படையாகின்றன. இதைத் தான் அகத்திய சூத்திரம் நமக்கு உணர்த்துகின்றது; இலக்கிய மின்றேல் இலக்கண மின்றே எள்ளின் ருகில் எண்ணெயு மின்றே: எள்ளினின்று எண்ணெய் எடுப்பது போல இலக்கியத்தினின்று எடுபடும் இலக்கணம் . என்னும் குத்திரத்தின் வழி, மொழிக்கு இலக்கணம் முக்கியமான போதிலும், அவ்விலக்கணம் அதற்கு முன் தோன்றிய இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டே தோன்றிற்று என்பதைக் காணலாம். இவ்வுண்மை தமிழ் மொழிக்கு மட்டும் பொருந்திய தனி விதி: யன்று. உலக மொழிகள் அனைத்துக்கும் இவ்வுண்மை பொருந்தும். நூல் என்பது சில இலக்கண வரம்பு களுக்கு உட்பட்டுகின்ற காரணத்தால் மட்டும் அமைந்து விடாது; ஏனெனில், அவ்விலக்கண வரம்புகள் பெரிய இலக்கியங்கள் வழித் தோன்றியவைகளே. என்று ஹட்ஸன் நன்கு விளக்கிக் காட்டுகின்ருர். எனவே இலக்கணம் என்பது இலக்கியத்தினின்று தோன்றிய தென்பதும், பின்வருவாருக்கு ஒரு வழிகாட்டியாய் நிற்ப தென்பதும் தெளிவு. புதியவராகப் பயில வரும் மாண வருக்கு அவ்விலக்கணம் வழி காட்டியாய் இருப்பதாலேயே அவருக்கு அது முக்கியமாய் இருக்கிறது." 1. A book is not literature because it conforms to certain rules, but rather that these rules are valid because: they are drawn from adimitted works of literature (Some Principles of Literary Criticism, p 34.) . 2 All rules and principles are derived from literature, not the literature from rules and principles (Some Principles. of Literary Criticism by Hudson p. 32.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/52&oldid=874711" இலிருந்து மீள்விக்கப்பட்டது