பக்கம்:தமிழ் உரை நடை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-44 தமிழ் உரை கடை இனி இவ்வாறன இலக்கணம் பாட்டுக்கு அதிகமாக இருக்கிறதே ஒழிய உரைநடைக்கு இல்லை என்னலாம். பாட்டினை வகைப்படுத்தி, அசையும் சீரும் அமைத்து, அவற்றிற்கெல்லாம் வரையறை ஏற்படுத்தும் இலக்கணங் களே யாப்பு எனச் சொல்லுகிருேம். தொல்காப்பியச் செய்யுளியலிலும் உரைநடை பற்றிய இரண்டொரு குத்திரங்களைத் தவிர்த்து, பிற அனைத்தும் பாட்டினேப் பற்றியனவாகவே அமைகின்றன. பாட்டு உரைநடை ஆகிய இரண்டின் இலக்கணங்களையும் காட்டுவதாலேயே அது செய்யுள் இயல்' என்று பெயர் பெற்றது போலும்! உரைநடைக்கு ஏன் விரிந்த இலக்கணம் இல்லே? நம் தமிழ் மொழியில் மட்டுமன்றிப் பிற மொழிகளிலும் இந்த கிலே இருக்கக் காண்கிருேம். பலவாய நாவல் போன்ற உரைகடை இலக்கியங்களைப் பெற்ற ஆங்கில மொழியிலும் கூட அதற்கு இலக்கணம் இல்லையே! காரணம் என்ன? அது மொழிக்குத் தேவையற்றதா? தேவையற்றது என்று யாரே சொல்ல வல்லார் பாட்டினைக் காட்டிலும் உரை நடையே மக்களிடம் அதிகமாகப் பயின்று வருகிறது. எனவே, அது மொழிக்கு-மக்கள் வாழ்விற்கு-இன்றியமை யாதது. என்ருலும், அதற்கு இலக்கணம் இல்லையே! ஆம் இல்லைதான். உரைநடை பாட்டினைப் போன்று அத்துணைக் கட்டுப்பாடுகளுக்கும் அளவு முறைகளுக்கும் உட்பட்டதன்று. ' உள்ளக் கருத்தை மற்றவருக்கு உணர்த் தும் வகையில் எளிய முறையில் எழுதப்படுவதே உரை 1. (a) There are perhaps, fewer general principles to govern-either matter or treatment in fiction than in any other department of Literature. (Some prlnciples of Literary Criticism by Hudson, p. 285.) (b) For the story is an casier—and not governed by so strict laws of artistic form. (Hudson p. 285.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/53&oldid=874713" இலிருந்து மீள்விக்கப்பட்டது