பக்கம்:தமிழ் உரை நடை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது உரை நடை? 45: கடை. ஆகவே, அத்ற்கு அத்துணைக் கட்டுப்பாடுகளும் தேவை இல்லை. உரைநடையிலும் நாடகம், நவீனம் போன்றவற்றை எழுதும் ஆசிரியர்கள் அவ்வளவு இலக்கண வரம்பில் கின்று செல்ல வேண்டிய நியதியில் கட்டுப்படத் தேவை இல்லை எளிமையிலும், மற்றவர்கள் விளங்கிக் கொள்ளும் வகையிலும் அவர்தம் உரைநடைகள் அமைவது போதும் போலும் என்ருலும், உரைநடை இலக்கண வரம் பற்றுச் செல்வதென்பது பொருளாகாது. அதற்கு ஒரு. திட்ட வரையறை உண்டு. பாவினைப் போன்று பரந்த வரை யறை இல்லே என்பதே கருத்து. வரையறை அற்ற ஒன்று என்ற நிலையில் யாரும் உரைநடை எழுதலாம் என்று. எண்ணில்ை அது பெருந்தவருகவே முடியும். உரைநடை அமைய வேண்டிய விதத்தையும், அது வளம் பெறும் வழியையும், அதனல் பயன் பெறுமுறையையும் பெளல்டன்' என்பார் நன்கு எடுத்துக் காட்டுகின்ருர். அதைப் பின்னர்க் காண்போம். உரை நடை எழுதுவோரும் பிற இலக்கியங்கள் எழுது: வோரும் அவரவர்தம் கால நிலைக்கு ஏற்பவே ஏற்றமும் சிறப்பும் பெறுகின்றனர். சிலப்பதிகார உரைநடைக்கும், ஈட்டின் உரைநடைக்கும், இன்றைய உரைநடைக்கும் எத்தனையோ மாறுபாடுகளைக் காண்கிருேம். அவரவர் அவ்வக்கால நிலைக்கும் தகுதிக்கும் ஏற்ப எழுதிச் சென்றிருக்க கின்றனர். ஈட்டின் உரையாசிரியர் இன்றிருப்பராயின், அந்த நடையைக் கையாளமாட்டார். அப்படி எழுதினும் அது பயன் தராது. அது போன்றே, இன்று உரை நடை எழுதும் ஆசிரியர் அன்று இருந்திருப்பாராயின் அவர்தம் நடையே வேறு வகையாய் இருக்கும்.எனவேதான் உரைநடை காலந்தோறும் மாறுபட்டுக் காண்கிறது. அதுமட்டுமன்றி. 1. Marjorie Boulton—The Anatomy of Prose, p. 6.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/54&oldid=874716" இலிருந்து மீள்விக்கப்பட்டது