பக்கம்:தமிழ் உரை நடை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 தமிழ் உரை நடை அவ்வுரையாசிரியர்கள் அவ்வக்காலக் கூறுபாட்டாலேயே சிறக்கிருர்கள். இவ்வுண்மையை ஹட்ஸன் அவர்கள் ஷேக்ஸ்பியர் (Shakespeare), அலெக்ஸாண்டர் போப்பு (Alexander pope) இவர்கள் மேல் வைத்து நன்கு விளக்கு கின்ருர், எனினும், அவை சிறந்தனவாக விளங்குமே யானல், எங்காளும் போற்றப்பட்டே திரும் என்பதையும் அவர் எடுத்துக் காட்டத் தவறவில்லை. எத்தனையோ இலக்கியங்கள் - பாவும் உரைநடையும் - தோன்றிய காலத் திலேயே மடிய, ஒரு சில மட்டும் கால வெள்ளத்தைக் கடந்து வாழ்வதை எல்லாமொழி யுள்ளும் காண்கிருேம். எனவே சிறந்த உரை நடை நூல்கள் எக்காலத்தில் தோன்றியவா யினும், சிறந்து, மக்கள் வாழ்வோடு பொருந்தி, இனிமையும் எளிமையும் கலந்து இன்னேசையோடு பீடு நடையில் செல்லுமாயின், அவை என்றென்றும் வாழும். அல்லா தன...? ஒரு சில நூல்கள் தோன்றிய காலத்தில் எல்லோராலும் நன்கு போற்றிப் படிக்கப்படும். எனினும் அவை மறுகாளே வாழ்விழந்தனவாக மாறின், அவை: எவ்வளவுதான் மக்களால் விரும்பிப் படிக்கும் அவ்வேளை இலக்கிய மாயினும் (Book for the time) அவை சிறந்த இலக்கியமாகப் போற்றப்படமாட்டா." எழுத்தாளர் சிலர் அவ்வக்காலத்தில் வாழும் மக்களது வெறி உணர்ச்சிகளையோ அன்றி வேறு கிளர்ச்சி எண்ண்ங்களையோ உணர்ந்து, அவ்வத்துறையில் தமது விருப்பம் உண்மையில் செல்லவில்லை என்ருலும், மக்கள் 2. Some Principles of Literary Criticism, by . Hudson, p. 5, - - ... 3. ibid. p. 22. 1. Some Principles of Literary Criticism, by Hudson, p. 283. . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/55&oldid=874718" இலிருந்து மீள்விக்கப்பட்டது