பக்கம்:தமிழ் உரை நடை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது உரை நடை? 49 புறத்தோற்றத்தில் நாம் காணும் வேறுபாட்டின் அளவே அவற்றின் வேறு பாட்டின் அளவும். யாரே அவற்றின் உள்ளிட்டைக் காணவல்லார்! 'எனினும், ஓரளவு பகுத்துப் பார்ப்பின், சில உண் மைகள் தோன்றும். உள்ளம் உணர்ச்சி வயப்பட, அதன் வழியே சற்று உண்மை உணர்ந்து (புனேந்துரையும் புகழுரை யும் கூட்டி) செய்யப்படுவதைப் பாடலாகவும் உள்ளதை உள்ளவாறே உரைப்பதை உரைநடையாகவும் கொள்ள லாம். உரைநடை எளிமையாக யாவராலும் உணர்த்தப் பயன்படுவது. பாட்டோ அவ்வாறன்று. எதுகை மோனே கலந்த சொல்லழகுபடப் புனேவது பாடல். உரைநடை அத்தகையது அன்று என்ருலும், அதிலும் சொல்லின் ஓசை உடைமை இல்லை என்று சொல்ல முடியுமா? Rhythm' என்ற சொல் ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது. அதற்கு உரை காண்கின்றவர். பாட்டு உரைநடை இரண் டிலும் சொற்களால் ஆக்கப்பெறும் ஓசை உடைமையே எனக் காட்டுகின்றனர். இவ்வோசை உடைமை உரை sool u%gyub (measured flow of words and phrases in verse or prose) உண்டு. என்ருலும், பாட்டுக்கு இன் னின்ன வகையில் சொல் அமைப்புக்கள் அமைய வேண்டும் என வரையறை செய்திருப்பது போன்று உரைநடைக்கு வரையறை இல்லை. எனவே, உரைநடை ஓசை யுடைத்தாக இருக்க வேண்டும் என்று கூறுவதன்றி, அது எத்தகைய ஓசை உடையதாக வேண்டும்? அதன் எல்லேயும் வரம்பு களும் யாவை? என்பனவற்றை யாராலும் வரை யறுக்க முடியாது.” என்னும் முன்னுரையோடு ஹெர்பர்ட்டு ரீடு: தமது ஆங்கில உரைநடை என்ற நூலைத் தொடங்குகிருர், 1. The Concise Oxford Dictionary of Current English, p. 1011. - 2. Herbert Read in Bnglish Prose Style (Introduction) 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/58&oldid=874723" இலிருந்து மீள்விக்கப்பட்டது