பக்கம்:தமிழ் உரை நடை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தமிழ் உரை நடை இவ்வாறு முன்னுரையில் விளக்கங் கூறி உரை நடைக்குத் தேவையான உறுப்புக்களாகிய சொற்கள், அவற்றை விளக்கும் பண்பு, உவமை போன்ற கய நிலைகள், சொல்லாக்கம், பகுப்பு முதலியவற்றையும், உரைநடை அமைப்பின் சிறப்பு, முறை, பயன், மரபு முதலியவற்றையும் தம் நூல் முழுவதும் விளக்கிக்கொண்டே செல்கிருர். அவற் றிற்கெல்லாம் அவர் அவர்தம் நாட்டு உரைநடை ஆசிரியர் பலரையும் அழைத்து அழைத்து நமக்கு அறிமுகப்படுத்தி, அவர்தம் சொற்கள் வழியே நமக்கு எடுத்துக்காட்டுகளை வழங்குகின்ருர், அனைத்தையும் ஈண்டு விளக்கின் அது வேறு விளக்கமாக அமைவதோடு, இங்குத் தேவையற்ற தாகவும் முடியும். நம் உரைநடை அமைப்பின் வழி, காலப் போக்கில் அவ்வக்கால உரைகளையும் அவற்றின் அமைப்புக் களேயும் ஆழ்ந்து காணுங்கால் தமிழில் உள்ள பல உரை நடைகளையே நாம் மேற்கோள்களாகக் கொள்ளலாம். எனவே, இந்த அளவோடு அவர்தம் விளக்கத்தை நிறுத்தி, மேலும் இரண்டோர் ஆங்கில ஆசிரியர் கருத்தைக் கண்டு, 'எது உரை நடை? என்பது பற்றி ஒரு முடிந்த முடிவுக்கு வருவோம். - - பொனமி டோபிரீ' என்பார் உரைநடைப ற்றி ஒரு நூல் எழுதியிருக்கிருர். இக்கால உரை நடை' என்னும் தலைப் பில் அவர் நூல் அமைகின்றது. நூல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை அழகாகத் தம் முன்னுரையில் அவர் விளக்குகின்ருர் எத்தனையோ நூல்கள் உலகில் வெளி வந்துகொண்டே யிருக்கின்றன. அவை அனைத் தையும் மக்கள் விரும்பிப் பயிலுவதில்லை. அவற்றுள் ஒரு சில, மக்கள் உள்ளத்தைத் தொட்டு உணர்வூட்டக் கூடிய வகையில் அமைகின்றன. அதற்குக் காரணம் என்ன? எழுதுகின்ற எழுத்தாளன் தன்னை மறந்து 1. Bonamy Dobree–Modern Prose Style

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/59&oldid=874725" இலிருந்து மீள்விக்கப்பட்டது