பக்கம்:தமிழ் உரை நடை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது உரை கடை? 51 தானே அந்த எழுத்தாக அமைகின்றன். அதைப் படிக்கும்போது அவன் பேசக் கேட்பது போலவே இருக்கிறது. நாம் அதைப் படிப்பதாக கினைப்பதில்லை. ஆசிரியர் சொல்ல நாம் கேட்கும் நிலையில் நாம் நிற்கின் ருேம். இவ்வாறு நம்மையும் நம் உள்ளத்தையும் அங் நூல் மயமாக்கும் திறத்தில் வல்லனகி, தானே நூலாகக் காட்சியளிக்கும் பண்பில் முகிழ்க்கும் எழுத்தாளனது எழுத்துக்கள் என்றென்றும் வாழும் என்கிருர் அவ்ர். தமிழ் நாட்டில் கலையோடு ஒன்றிய கலைஞர் வாழ்வையும் கலை நோக்கையும் அறிஞர் வாழ்வையும் விளக்கும் பழ மொழிகளின் கருத்தையே அவர் இவ்வாறு அழகுபட விளக்குகின்ருர். ஆம்! பிறர் உளந்தொட எழுதுவதே ஒர் உயர்ந்த கலே யல்லவா! பின்பு அவர் நூல்களை மூவகையாகப் பிரிக்கின்ருர். அவை அனைத்தும் சிறப்பாக உரை நடை இலக்கியங் களாகவே அமைகின்றன. வருணனை உரை, விளக்க உரை" உணர்ச்சி உரை" என்னும் மூன்று வகைகளே அவர் காட்ட விரும்புவன. ஒரு செயலையோ, ஒரு பொருளையோ, ஒரு மனிதனையோ பற்றி ஆசிரியர் விளக்கி உரைப்பதே வருணனை உரையாகும். எவ்வாறு செயல்கள் நிகழ்கின்றன என்ற அறிவியல் ஆய்வுகளைக் கூறுவதும், திறய்ைவு முறை களைக் காட்டுவதும் பொருளில் உள்ள சிறப்பியல்புகளை விளக்கிக் காட்டுவதும் விளக்க உரையாகும். துன்ப எல்லை யிலோ, இன்பத்தின் பிடிப்பிலோ, மகிழ்ச்சிப் பெருக்கிலோ தம்மை மறந்தும் மீறியும் உரைப்பதே உணர்ச்சியுரை. 1. Descriptive Prose 2. Explanatory Prose 3. Emotive Prose

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/60&oldid=874730" இலிருந்து மீள்விக்கப்பட்டது