பக்கம்:தமிழ் உரை நடை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தமிழ் உரை நடை இவை மூன்றையும் தனித்தனி உரைநடையாசிரியரே உணர்த்த வேண்டுமென்பதில்லை. ஒரே ஆசிரியருங்கூட, தம் மனநிலை, காலநிலை ஆகியவை கருதி மூன்று நிலைகளிலும் நூல் எழுதக்கூடும். சொல்லும் சொற்களின் அமைப்பும், பொருள் நிலையும், பொருட் பாகுபாடும் ஒவ்வொரு வகையில் செல்லும்,சில வெறுஞ்சொல்லோவியங்களாகவே அமைந்து. பொருளற்றனவாகவும் இருக்கலாம். நல்ல கருத்துக் குவி யல்களைப் பொதிந்து சொல்லமாட்டாத திறமையினலே, சொல் கடை முட்டுப்பாட்டினல் கருத்துக்கள் விளக்கமாகக் காட்டப் பெருவிடினும், சாதாரணச் சொற்களின் அமைப் பிலே காட்டப்பெற்றனவாகவும் இருக்கலாம். ஆசிரியன் எடுத்துக்கொண்ட பொருளே எந்த வகையால் எவ்வகைச் சொற்களால் ஆராய்கின்ருன் என்ற வகைகளே எல்லாம். முதலில் எண்ணிப் பார்க்கத்தான் வேண்டும். காய்தல், உவத்தல் அகற்றி ஒரு நூலே ஆராயும் காலத்து அதன் நலக்கேடுகள் தோன்றி உணர்வூட்டும். ஆயினும், அவ்: வாராய்ச்சிகளுக்கெல்லாம் மேலாக, ஓர் ஆசிரியன் தன்னை மறந்து, தானே நூலாகி, தன் வாய்மொழியிலே பேசும் கிலேயில், படிப்பவர் உள்ளத்தில் உணர்ச்சி ஊட்ட உண்மை நெறி காட்டி இயற்றுகின்ற நூலே எல்லா எல்லைகளையும் தாண்டி என்றென்றும் வாழும் நூலாகும். உரையின உயர்ந்த நடையில் எழுதுவது நல்லது எனச் சிலர் கினைக்கின்றனர். இடைகாலத்துத் தமிழ் உரைகளும், இறையனர் களவியல் உரை போன்றனவும் அத்தகையனவே. எனினும், இக்காலத்தில் மிக எளிய உரைநடையே அறிஞர்களால் விரும்பி எழுதப்படுகிறது. "நடை என்பது ஆபரணமன்று; பயிற்சியன்று, துள்ளுவ தன்று; விளக்க முடியாதது மன்று. அது ஆசிரியனது உள்ளத் துயர்வினது; உணர்த்த விரும்பும் தன்மையின் அளவினது;தகுதியான தேவையான வார்த்தைகளால் உரைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/61&oldid=874731" இலிருந்து மீள்விக்கப்பட்டது