பக்கம்:தமிழ் உரை நடை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தமிழ் உரைநடை ஆசிரியர்கள் தாங்கள் மேற்கொண்ட பொருளுக்கு ஏற்ப இழுமென் ஒலியுடைய நல்ல சொற்களே-இலக்கியத்தில் பயின்று வரும் சொற்களை-எடுத்தாள்வார்கள். எனினும், நாடகம் எழுதும் ஆசிரியர்கள், தாங்கள் பயன்படுத்தும் பாத்திரங்களுக்கு ஏற்ப நிலையில் தாழ்வதும் உண்டு. நாடகத்தில் வரும் ஒரு பணியாளனே, காவற்காரனே, அன்றிக் கடையில் பண்டம் விற்பவனே உயர்ந்த தமிழ் நடையில் பேசுகின்ருன் என்ருல், கேட்பாருக்கு இயற்கைக்கு மாறுபட்டது போலத் தோன்றும். எனவே, நாடகாசிரி யர்கள் உலக வழக்கில் வழங்கும் சாதாரணச் சொற்களை எடுத்தாள்வதைக் காண்கிருேம். ஆனல், அந்த முறை சரியாகுமா என ஆராய்தல் வேண்டும். சரியாகாது என்ருல், நாடகப் பாத்திரங்களின் இயல்புகள் அனைத்தை யும் எடுத்துக் காட்ட இயலாது. சரியாகும் என்ருல் மொழிவழி தவறு செய்தவர்களாவோம், எனவே, இங்கிலே எண்ணிப் பார்க்க வேண்டுவதாகும். என்ருலும், அதற்காக மிக மிகத் தாழ்ந்த நடையில் நாடகப் பாத்திரங்களைப் பேச வைப்பதேர், நம் மொழியில் நல்ல சொற்கள் இருக்கவும் பிறமொழிகளிலிருந்து கடன் வாங்கிப் பேசவைப்பதோ கூடாது என்பதையும் உணர்தல் வேண்டும். உரைநடை மற்றவருக்கு எளிமையில் எடுத்துக் கொண்ட பொருள் விளங்க வைப்ப தென்பதை மேலே கண்டோம். எனவே, பாட்டிடைப் பொருந்திய அணி நலன்கள் உரைநடைக்குத் தேவையில்லை. புனைந்துரை களும், அவற்றை அணி செய்யும் அணிகலன்களும் பாட்டிடை அழகு தரும் அமைப்புக்களாக அமையலாம். ஆயினும், அவை உரைநடைக்குத் தேவையில்லை என்னலாம். எளிய, இனிய, நல்லோசை உடைய உரைநடை எழுது பவனே சிறந்த எழுத்தாளன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/65&oldid=874742" இலிருந்து மீள்விக்கப்பட்டது