பக்கம்:தமிழ் உரை நடை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது உரை நடை?. 59. தொன்றுமே அவர்களுக்குக் கஷ்ட் சாத்யமான காரியமாக இராகின்றது. செய்யுள் வடிவான நூல்களும், விசேஷ. இலக்கணப் பயிற்சி முதலிய கஷ்டங்கள் இல்லாமலே,. சிறிது கல்வியுடையவர்களும், அகராதி முதலியவற்றின் உதவியால், எளிதில் ஒதத் தக்கவை. ஆகவே, யுரொபியர் மிக்க பிரயாசையில்லாமலே அறிவு தெளிந்து, காரிய: நிர்வாகம் செய்யத்தக்கவர்களாய், நாகரிக நிலைமையில் நம்மினும் சில படி மேற்பட்டவராகி விட்டனர். செய்யுள் வடிவமான நமது நூல்களில் உள்ள கஷ்டம், நமக்குப் பிரத்தியகூடி அனுபவம். கல்விமான்கள் பொழுதுபோக்காகப் படிக்கத்தக்க வசன நூல்கள் இன்னின்னவென எடுத்துச் சொல்வது நமக்கு நாணம் தருவதாகும். சிறுவர் சிறுமியர்" களும் கூலியாள் வேலையாட்களும் படிக்கலான புத்தகங்கள் வேண்டுமானல், ஏதேனும் கிடைக்குமா எனப் புத்தகக் கடைகள் தோறும் சென்று கேட்டறிதல் வேண்டும். இது விஷயத்தில் நாம் எச்சரிக்கை கொண்டு, ஏழைகளுடைய கண்களைத் திறவாவிட்டால், இனி நமது நாகரிக கிலேமை மேற்படாது. நாம் கடைப்பட்டவர்களாகக் கருதப்படு: வோம். இப்பொழுது தமிழ் வசன நூல்களின் பூர்வோத். தரத்தை ஆராய்வோம். - 1. வசன நூல்களின் பூர்வோத்தரம் "வசனம் என்னும் வடமொழி, சொல் என்றும். வாக்கியம் என்றும் பொருள்படும். வாசகம் என்னும் வடமொழி, வசனம் என்னும் பொருட்டு. இவ்விரண்டும். கவியின் வேருய சொன்னடையை உணர்த்தும். வசனித்தல் என்பது பேசுதல் என்றவாறு. கவியும் வசனமும், வட மொழியில், முறையே பத்தியம் கத்தியம் என்றும் வழங்கும். பத்தியமாவது, பாதங்களால் நடைபெறுவது. கட்டுரைப் போலியும், செய்யுட்போலியுமாக வருவது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/68&oldid=874748" இலிருந்து மீள்விக்கப்பட்டது