பக்கம்:தமிழ் உரை நடை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 - தமிழ் உரை நடை கத்தியம் கவியின் வேருய சொன்னடை, தமிழில் உரைநடை எனப்படும். உரை என்பது பேச்சு என்பதற்கும், வியாக்கி யானம் என்பதற்கும் வழங்கும் வார்த்தை. பேச்சு என்னும் பொருளில், உரை என்பது உலக வழக்கு என்ற வாறு. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்' என்ப தல்ை இது விளக்கமாகும்.செய்யுள் என்பது முற்கால வழக் கில், இலக்கியச் செறிவுள்ள உரையையும் தழுவியிருந்தது. உரைச் செய்யுள் என்ற வழக்கு இருந்தது. இதற்குச் சான்று. இலக்கணம் இலக்கியம் உரையெனப் பெயர்பட் டிருககுமென் றெண்ணுக செய்யுளின் இயல்பே ' என்றது இலக்கணக் கொத்து. உலக வழக்காகப் பேசப் படுவதும் எழுதப்படுவதும், உரைநடை, உரை வாசகம் என வழங்கும். உரை, வாசகம் என்பன இருபெயரொட்டு. தமிழில் வசனம் என்ற வடமொழியே, சில காலமாய் உரை கடையைக் குறிப்பதாய்ப் பெருவழக்கினதாயிற்று. உறுதிச் சொல், ஏற்றசொல், பொருளுள்ள சொல் எனப் பொருள் படும் கட்டுரை என்ற வார்த்தையும், உரைகடையைக் குறிக்கின்றது. இது "கட்டுரை வன்மை” என்பதல்ை போதரும்; "கட்டுரை வகையான் எண்ணுெடு புணர்ந்து' எனத் தொல்காப்பியத்திலும் வருகின்றது. "பழைய சங்க நூல்கள் எல்லாம் பாக்களால் ஆனவை. முற்றும் உரைநடையான வசன நூல் யாதொன்றும் இல்லை. அடிவரையின்றி வரும் செய்யுளின் வகைநூலும் உரையும் பிசியும் முது மொழியும் மந்திரமும் கூற்றிடை வைத்த குறிப்பும் என ஆறென்றும், அவற்றுள் -உரைப்பகுதி வழக்கு. - பாட்டிடை வைத்த குறிப்பும் பாவின்றெழுந்த கிளவியும் பொருளொடு புணராப் பொய்ம்மொழியும் பொருளொடு புணர்ந்த நகை மொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/69&oldid=874750" இலிருந்து மீள்விக்கப்பட்டது