பக்கம்:தமிழ் உரை நடை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~62 தமிழ் உரை நடை வசன நூல்களையும் வியாக்கியானங்களையும் இயற்றி னேர் வடமொழியில் நிரம்பிய புலமை உள்ளவர்கள். மதச் சார்பான விஷயங்களை வடமொழியில் கின்றும் தமிழில் கொணர்ந்து கூட்டினவராதலின், இவர்களுடைய வசனப் பாங்கு இங்ங்னம் மணிப்ரவாளம் ஆயிற்று." இது நிற்க, உரைநடை என்பது பற்றிப் பல வகை யில் ஆராய்ந்தோம். உரைநடை பாட்டினும் வேறு பட்ட தெனவும், பாட்டினைப் போன்று பல்வேறு வரம்பு களின் கட்டுக்கு உட்படாதேனும், ஓசையுடையதாதல் வேண்டும் எனவும், எனவே பாட்டுச் செய்யுள் என்பதே போல உரைச் செய்யுள் எனவும் அது வழங்கப்பட்ட தெனவும், அவ்வுரைகடை தமிழ் நாட்டிலும் உரோம கிரேக்க நாடுகளிலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் .பிருந்தே வழக்கத்தில் இருந்ததெனவும், அவ்வுரைநடை இனிய எளிய நடையில் ஆசிரியன் தான் எடுத்துக் கொண்ட பொருளை மற்றவர் அறிந்து கொள்ளும்படி விளக்கப் பயன்படுத்தப்படுவதெனவும், அது அவரவர் ஆய்வு மனப்படி மூன்று வகையாகவும் ஐந்து வகையாகவும் அமையு மெனவும், கட்டுப்பாடு இன்றேனும் சொல் அமைப்பு முறையும் சொற்களே ஆளும் முறையும் ஒழுங்கு பெற அமைய வேண்டு மெனவும், பொருளே விளக்குவதற்காக எந்தத் தாழ்ந்த சொல்லேயும் உபயோகித்தலாகா தெனவும், ஆசிரியன் தானே அந்த நடையாகித் தன்னை மறந்து நின்ற நிலையில் எழுதும் உரை நடையே சிறக்கு மெனவும் அதுவே காலம் கடந்து வாழ்வது எனவும் அறிந்தோம். இனி அவ் வரைநடை தமிழில் காலந்தோறும் எவ்வெவ்வாறு மாறு .பட்டு வளர்ந்து வந்துள்ளதென்பதைப் பகுத்துக் காணலாம். 1. தமிழ் வியாசங்கள்:செல்வக்கேசவராய முதலியார். பக் 71-74 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/71&oldid=874756" இலிருந்து மீள்விக்கப்பட்டது