பக்கம்:தமிழ் உரை நடை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தமிழ் உரை நடை எண்ணுாறு ஆண்டுகளுக்கு முன், கிறித்துச் சகாத்தத் தொடக்க நாளாகவே கொள்வோம். அங்காளில் யவன நாடு தமிழ் நாட்டோடு தொடர்பு கொண்டிருந்தது. யவனம் என்பது ரோம கிரேக்க நாடுகளே என்பதை வரலாற்று ஆசிரியர்கள் நன்கு விளக்குகிருர்கள். அங் நாடுகளில் கி. மு. முதல் நூற்ருண்டிலும், (இலத்தீன்) கி. பி. ஐந்தாம் நூற்ருண்டுக்கு முன்னும் (கிரீக்கு) உரை நடை வழக்கத்தில் இருந்தது என்பதை மேலே காட்டு ஆய்வாளர்கள் நன்கு விளக்கியுள்ளமை கண்டோம். எனவே, அக்காலத்தை ஒட்டி அங்காடுகளுடன் பழகிய தமிழ் நாட்டிலும் உரைநடை வழக்கத்தில் இருந்தது என்று. கொள்ளுவதில் தவறு இல்லை யன்ருே? - சி ல ப் ப தி கா ர த் தி லும் உரைநடையில் நீண்ட கதையோ, அன்றிப் பெரும்பகுதிகளோ அமையவில்லை. சிலப்பதிகாரத்தை அறிஞர் உரை யிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்' என்றே வழங்குகின்றனர். எனவே, பாட்டால் இயற்றப் பெற்ற சிலப்பதிகாரத்தின் இடையிடையே உரைநடை கலக்கப் பெற்றுள்ளது என்ற உண்மைதான் நமக்குப் புலகிைன்றது. சிலப்பதிகார நூல்வழி நுழைந்து நாம் கண்டாலும், இந்த உண்மைதான் நமக்கு விளங்கு கின்றது. சிலப்பதிகாரம் கோவல கண்ணகியர் கதையை நமக்குக் காட்டும் ஒரு பெருநூல். தமிழில் இதற்கு முன் இத்துணேப் பெருங்காப்பியமாக ஒன்றும் வெளி வர வில்லை. அதுவும் தவிர, இது போன்ற ஒரு தலைவனே அமைத்துப் பாடிய காப்பிய நூல் இதற்கு முன் இல்லை. எனவே, சிலப்பதிகார நூலே தமிழ் இலக்கியத்தில் ஒரு. புது மாற்றத்தை உண்டாக்கிவிட்டது என்பர் அறிஞர். அந்த மாற்றத்தோடு, புதிதாகத் தோன்றிய உரைநடை அமைப்பும் கலந்து அந்நூலேத் தமிழ் நாட்டு வரலாற்றி:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/73&oldid=874760" இலிருந்து மீள்விக்கப்பட்டது