பக்கம்:தமிழ் உரை நடை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகார உரை நடை '65 லேயே-தமிழ் இலக்கிய மொழி வரலாற்றிலேயே-ஒரு கிலேத்த இடத்தில் இருக்குமாறு செய்துவிட்டன என்னலாம். சிலப்பதிகாரத்தில் உரைநடை தொடர்ந்து செல்வ தாகக் காண இயலாது. உரை பெறு கட்டுரை, உரைப்பாட்டு மடை முதலிய தலைப்புக்களில் சிற்சில வகையில் உரை இடையிடையே கலக்கப் பெறுகின்றது. அவற்றுள்ளும் உரைப்பாட்டு, மடை பாட்டெனவே காண்கின்றது. இத் தொடருக்கு உரை கூற வந்த அரும்பதவுரையாசிரியர், 'உரையாகிய பாட்டை இடைப் படுத்தது என எழுது கின்றனர். எனவே, உரையையும் பாட்டு என்ற பெயரா லேயே வழங்கினர்கள் எனவும் கொள்ளவேண்டியுள்ளது. செய்யுள் என்னும் பாட்டுடன் உரையாகிய பாட்டும் இணைந்ததே உரைபெறு கட்டுரையாயிற்று என்பது கருத்து. இக்கருத்தை மேலே காட்டு ஆசிரியர் சிலரும் வற்புறுத்துகின்றனர். உரைநடை பாடப்படுகின்ற இசை கடை சந்த ஒழுகலாற்றில் கில்லாது, ஆனல் இழுமென் இன்னெலி நிலை கெடாது, உயர்ந்த நடையில் செல்வது என்பதை ஆங்கில ஆசிரியர்கள் ஒத்துக்கொள்கின்ருர்கள். எனவே, உரைநடை என்பது சிலர் நினைப்பது போன்று, ஏதோ பேச்சு வழக்கில் எழுதுவதுதான் என்ற எண்ணம் மாறவேண்டும். சிலப்பதிகார உரைநடை அந்த உயர்ந்த கிலேயில்ேதான் நம் உள்ளத்தில் இடம் பெற்றுள்ளது. சில பகுதிக்ள் பாட்டே போன்று-செய்யுள் போன்று-சென்று முடிவதையும் சிலப்பதிகாரத்தில் நாம் காணக்கூடும். கட்டுரை என்று குறிக்கப்பெற்ற சில, உரைநடை அமைப் பிலும் செய்யுள் நடையில் அமைந்திருப்பதை அறிகிருேம். l. There should be a harmony and even a rhythm in the progress of the style. (En. Britannica, Vol. 18, p. 591.) 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/74&oldid=874761" இலிருந்து மீள்விக்கப்பட்டது