பக்கம்:தமிழ் உரை நடை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தமிழ் உரை நடை என்ருலும், அவற்றின் முடிவும் பிறவும் அவை செய்யுள் நடையில் சென்று முடியவில்லை என்பதைக் காட்டுகின்றன. சிலம்பில் இந்தப் பர்ட்டி ற்கும் உரைக்கும் இடையில் சில சில தனிச்சொற்கள் வந்து நிற்கின்றன. அவை தனித்த சொற்களாயினும், அவையே உரைகடை ஆக்கத்திற்கு உறு துணையாக அமைகின்றன என்று கொள்ளவேண்டியுள்ளது. அத் தனிச் சொற்கள் உரைநடை இணைப்புக்களுக்கு உற்ற துணை செய்கின்றன என்னலாம். சிலப்பதிகார உரைநடை உயர்ந்த நடையாகவே அமை கின்றது. 'பாட்டைப் படித்துப் பொருள் கொள்வது கூட எளிமையாகிவிடும்; இந்த உரையைப் பயில இலயாது போலும் என்று சொல்லக்கூடிய வகையில் அமைகின்றது. உரைநடை எளிதாகவும், பாட்டுக் கடினமாகவும் அமைய வேண்டும் என்பது பலருடைய எண்ணம். ஆனல், அது முடிந்த எண்ண மன்று. பாட்டை மிக எளிய கடையிலும் பாடி விடலாம். எல்லோருக்கும் புரியும் வகையில் இந்த நூற்ருண்டில் பாரதி பாடியதைப் பாட்டு அன்று என்று யாரால் சொல்ல முடியும்? அதே நிலையில் சிலப்பதிகாரம், இறையனர் அகப்பொருள் உரை முதலியவற்றின் உரை நடையை எளியவை என்று யாரே கூற வல்லார்? எனவே, பாட்டு, உரைநடை என்ற இரண்டின் எளிமையும் கடுமை யும் அவரவர் மனப்போக்கு, காலநிலை,பிற சுற்றுச்சார்புகளே யொட்டி அமைகின்றன என்று கொள்ளுதல் பொருத்த மானதாகும். எத்துணை உயர் கடையினதாய் இருந்தாலும் படித்துணர்ந்து அறிந்துகொள்ளும் நல்லவர் வாழ்ந்தநாளில், பாட்டையோ உரை நடையோ மிக எளிய நடையில் எழு தில்ை யாரே ஏற்பார்? எனவேதான் இளங்கோவடிகள் தம் கால நிலைக்கு ஏற்ப உரைநடையைப் பாட்டு நடையினும் உயர்ந்த நடையுடையதாகவே ஆக்கியிருக்கிருர் என்பதை உணர வேண்டும். நூல் தொடங்கும்முன் காட்டும் கண்ணகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/75&oldid=874762" இலிருந்து மீள்விக்கப்பட்டது