பக்கம்:தமிழ் உரை நடை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகார உரைநடை 69 வேற்செழியன் விழாச் செய்தான். நாட்டுத் துன்பம் நீங்கிற்று. அது போன்றே கொங்கு நாட்டிலிருந்த கோசரும், இலங்கை மன்னனும், சோழனும் தம் தம் நாட்டில் விழா வாற்றி, நாட்டில் நலமுண்டாகச் செய்தனர். சேரர் செய்த விழாவைப் பின்னல் நன்கு சிறப்பித்துப் பேசுகின்ற காரணத் தால் இங்கு விளக்கவில்லை. பொருள் இவ்வளவுதான். எனினும், அதை அறிய உரைகடையில் உயரிய வகையில் இளங்கோ வடிகள் காட்டியிருப்பதை நோக்கின், அக்கால உரைநடை செய்யுள் நடைக்கு இகளத்த தன்று என்பது விளங்கவில்லையா? அரங்தை கெடுத்து வரம்தரும் இவளென ஆடித் திங்கள் அகவையின் ஆங்கோர் பாடி விழாக்கோள் பன்முறை எடுப்ப' என்று அகவற்பா வகையிலே அமைக்கும் முறையில சொற்போக்கு அமைந்த போதிலும் இதை உரைநடை என்று தான் அவர் கொண்டு விளக்குகின்ருர். எனவே, மேலே காட்டு அறிஞர்கள் ஆய்ந்து கண்ட முடிவுப்படி உரைநடை, உணர்வும் ஆற்ருெழுக்கும் விழுமிய ஓசையும் பெற்ற சொல்லோவியம் என்பதை அன்றே இளங்கோவடிகள் காட்டிவிட்டார் என்று சொல்வது பொருந்துமன்ருே! இனி நூலுள்ளும் பலவிடங்களில் உரைப்பாட்டுமன்ட' என்ற பகுதியும், கட்டுரைப் பகுதியும் வருகின்றன. தனிச் சொற்கள் சில விடங்களில் வருகின்றன. கட்டுரை என்பது சில விடங்களில் அகவற்பாப் போல அமைக்து சென்ருலும், - இரண்டோர் இடங்களில் உரைநடையாகவே வருதலேக் காண்கிருேம். கானல் வரியில் கோவலனும் மாதவியும் கடற்கரையில் அமர்ந்து அழகாகப் பாடுகின்றனர். அவரவர் தம் பாடல் முடிந்த நிலையில் கட்டுரை வருகின்றது. அக் கட்டுரை உரைநடையாகவே அமைகின்றது என்னலாம். கோவலன் கானல் வரிப்பாட்டைப் பாடி முடித்தான், அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/78&oldid=874765" இலிருந்து மீள்விக்கப்பட்டது