பக்கம்:தமிழ் உரை நடை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகார உரை நடை 71 இதைப் போன்றே மாதவியின் பாடலேக் கேட்ட கோவலன், அவள் மேல் ஐயமுற்று, அவளே விட்டு நீங்கும் இடத்திலும் கட்டுரை வருகின்றது. அமைப்பிலும் கடை யிலும் போக்கிலும் இதை ஒத்தே அக்கட்டுரைப் பகுதியும் அமைகின்றது. - ' எனக்கேட்டு, கானல் வரி யான் பாடத் தான் ஒன்றின்மேல் மனம் வைத்து, மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினுள், என, யாழ் - இசை மேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உறுத்தது ஆகலின், உவவுற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக் கை நெகிழ்ந்தனய்ை, 'பொழுது ஈங்குக் கழிந்தது; ஆகலின் எழுதும்' என்றுடன் எழாது, ஏவலாளர் உடன் சூழ்தரக் கோவலன் தான் போன பின்னர் ’’ - என்ற தொடரே அது. இதிலும் பாடல் முடிந்த பின், மனமாற்ற முற்ற கோவலன் செயல் ஆசிரியரால் எடுத்துக் காட்டப்பெறுகின்றது. இவ்வாறு பல கட்டுரைகள் அக்கால உரை நடை என்னும் இசை நலம் கலந்த வாசகத் தால் உணர்த்தப் பெறுவதை இளங்கோவடிகள் வாக்காக இன்னும் காண இயலும். நூலின் இறுதியில் வரந்தருகாதைக்கு முன் அமைந்த வாழ்த்துக் காதைத் தொடக்கத்தில் ஒர் உரைப் பாட்டு மடை வருகின்றது. உரைப்பாட்டு மடை என்பதற்கு "உரைப்பாட்டை நடுவே மடுத்தல் எனவும் உரைச் செய்யுளே இடைகிலே மடுத்தல் எனவும் அரும்பத உரை யாசிரியர் காட்டிய பொருளை மேலே கண்டோம். அஃது இங்கு கினேவுக்கு வருகின்றது. யாப்புவழி வரும் பாவினே - செய்யுளே - பாடலைப் பாடிக் கொண்டு செல்கின்ற புலவர் இடையிடை ஒசை இன்பம் உடைய உரையைக் கலந்து செல்கின்ருர் என்பது இவ்வரும்பத உரையாசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/80&oldid=874768" இலிருந்து மீள்விக்கப்பட்டது