பக்கம்:தமிழ் உரை நடை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தமிழ் உரை கடை கருத்தாய் விளங்குகின்றது. இதைப் பற்றித்தான் போலும் நூலுக்கே உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்' என்ற பெயர் வந்தது! வாழ்த்துக் காதையில் வரும் வாசகம், நீண்ட வாசக மாகும். ஆகவே, அத்தனையும் இங்கு நான் எடுத்துக் காட்ட வேண்டா என எண்ணுகிறேன். கண்ணகிக்குக் கோயிலெடுக்க நினைத்து, நினைத்தது முடித்து, வஞ்சியில் பெருவிழாச்செய்த ஞான்று, கடந்த ஒரு நிகழ்ச்சியையே இங்குத் தொகுத்து உரைப்பாட்டு மடை ஆக்குகின்ருர். இதையும் பாடலாகவே செய்திருக்கலாம். எனினும், அடுத்து வரும் இசையொடு கலந்த இசைப்பாடல்களிலும் வேறுபடுத்த இதை இவ்வாறு அமைத்தார் போலும் எனக் கொள்ள வேண்டியுள்ளது. சில அடிகளை மட்டும் இங்குக் காணலாம். - ' குமரியொடு வடவிமயத்து ஒரு மொழி வைத்து உலகாண்ட சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன், கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேரி யாற்றுக்கரை போகிய செங்குட்டுவன் புகழ் கூறி மேலும் செல்லுகிறது உரைப்பாட்டு மடை. இதில் இமயம் வரை செங்குட்டுவன் படை எடுக்க நேர்ந்த காரணமும், அதன் வழிக் கண்ணகிக்குக் கல் எடுக்க இமயம் சென்று திரும்பியதும், வஞ்சியுள் நடந்த விழாச் சிறப்பும், அச்சிறப்புப் பற்றி அறிந்த தேவந்தி முதலியோர் வஞ்சி வந்து விழா நலம் கண்டு அரற்றிய கிலேயும் பேசப்படு கின்றன. இவற்றுள் பெரும் பகுதி முன் கதை வழி நாம் கண்டிருக்கிருேம். நிகழ்ச்சிக்கிடையில் வேறு சில பழைய பாத்திரங்கள் வந்து சேர்கின்றன. இவற்றையெல்லாம் காட்டிப் பின் பாட்டின் வழி விழா நிகழ்ச்சியை விளக்கு கின்ருர் ஆசிரியர். எனவே, இப்பாட்டு மடையும் முன்னதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/81&oldid=874769" இலிருந்து மீள்விக்கப்பட்டது