பக்கம்:தமிழ் உரை நடை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகார உரை நடை . 73 யும் பின்னதையும் பின்னிப் பிணைக்கும் ஒன்ருய் அமைகின்ற தென்பதை நாம் நன்கு அறிகின்ருேம். இனி, கட்டுரை என்பதையே ஒவ்வொரு காண்டத்தின் இறுதியிலும் காண்கின்ருேம். நூலின் இறுதியிலும் கட்டுரை காதை என்னும் ஒன்றே அமைகின்றது. இவை உரையா, பாட்டா என்று ஆராயத் தோன்றும். முதலாவது கட்டுரை, பத்தாம் காதை இறுதியில் புகார்க் காண்ட முடிவில் வருகிறது. அது பெரும்பாலும் நூல் செல்லும் பாவழியே செல்கிறது என்பது பயில்வோருக்கு விளங்கும். அதன் முடிவில் ஒரு பரிசா நோக்கிக் கிடந்த புகார்க் காண்டம் முற்றிற்று என்னும் தொடர் உரை நன்டை போன்று அமைகின்றது. அதைப் போன்றே, மதுரைக் காண்டத்து இறுதியில் வரும் கட்டுரையில், பாண்டியன் நெடுஞ்செழியனேடு ஒரு பரிசா நோக்கிக் கிடந்த மதுரைக் காண்டம் முற்றிற்று' என்ற தொடரும், வஞ்சிக் காண்டத்து இறுதியில் செங்குட்டுவைேடு ஒரு பரிசு நோக்கிக் கிடந்த வஞ்சிக்காண்டம் முற்றிற்று' என்ற தொடரும் உரை நடை போலவே முடிகின்றன. இவற்றைக் கொண்டு தான் கட்டுரை என்ற பெயர் அமைந்ததா, அன்றிக் காண்டத்துக் கூறிய பொருளை ஆங்காங்கே தொகுத்துக் கட்டுரைத்தமையால் கட்டுரை என்று பெயர் அமைந்ததா என்பதை ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும். * இனி, மதுரைக் காண்டத்தில் இறுதியாக வரும் கட்டுரை காதை, நூலின் பாவழியேதான் செல்கின்றது. இடையில் سیمر தனிச் சொற்களோ, கட்டுரையோ, உரைப் பாட்டு மடையோ இடம் பெறவில்லை; உரை நடையில் செல்லும் பகுதியும் காணவில்லை. எனினும், மதுரை கிகழ்ச்சிக்குக் காரணத்தையும், அதன் வழிப் பாண்டியர் கொற்ற இயல்பினையும், பிறவற்றையும் கண்ணகிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/82&oldid=874770" இலிருந்து மீள்விக்கப்பட்டது