பக்கம்:தமிழ் உரை நடை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தமிழ் உரை நடை இவற்றின் இடை வரவால் பாடிச் செல்லும் பாட்டுக்களின் கிலே சிறிது தடைப்பட்டே அசைந்து செல்கிறது என்ன லாம். இத்தனிச் சொற்களால் உரைநடை வகையைப் பாட்டிடைப் புகுத்த நினைக்கும் கிலேயும் ஒரோ வழிப் புலனுகின்றது. முதலாவது காதையாகிய மங்கல வாழ்த்தில் ஆங்கு அதல்ை, அவளுந்தான்', 'ஆங்கு', 'அவரை', 'அவ்வழி' என்ற தனிச்சொற்கள் கதை ஓட்டத்துக்கு உறுதுணை யாய் அமைந்து பாட்டின் வேலையைப் பெரும்பகுதி குறைத்து விடுகின்றன என்னலாம். இத்தனிச் சொற்களுக்குப் பதில் இவற்றின் பொருளே எடுத்து விளக்க வேண்டுமாயின், ஆசிரியர் இன்னும் சில அடிகளைப் பாடியிருக்க வேண்டும் என்பது பயில்வார் அறியும் ஒன்று. எனவே, விரைக் தோடும் பாட்டின் வேகத்தைத் தடுத்து கிறுத்தும் இத் தனிச் சொற்கள், கவிஞனுடைய வேலையைக்கூட ஓரளவு குறைக்கின்றன என்னலாம். 'முடித்த கேள்வி முழுதுணர்ந்தோர் என்று பழங் குடிப் பண்பினைக் கூறிய ஆசிரியர், அடுத்துப் புகார் நகரைப் போற்ற வருகின்ருர். அதற்கிடையில் அவர் கூறிய அதனல், இதன் சிறப்பு இத்தகையது எனக் காட்ட அதனுல் என்ற தனிச் சொல்லேப் பெய்தார். அதே போன்று, கண்ணகியின் சிறப்பைக் கூறி வரு கின்றவர், அவளுக்கு மேலும் ஏற்றம் தர நினைத்தார், அந்த ஏற்றம் பேசப் பெறுமுன் அவளுந்தான் என்ற தனிச் சொல்லைப் பெய்து தொடங்குகின்ருர். மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர் ஈகைவான் கொடி அன்னுள் ஈராறு ஆண்டு அகவையாள்; அவளுந்தான், போதிலார் திருவிள்ை புகழ்உடை வடிவென்றும் தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்றும் மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன் பாள்மன்னே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/85&oldid=874773" இலிருந்து மீள்விக்கப்பட்டது