பக்கம்:தமிழ் உரை நடை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலப்பதிகார உரை நடை 17. என்று செல்கிறது சிலப்பதிகாரம். இதில் வரும் அவளுக் தான் என்ற தனிச்சொல், இத்தொகுதிக்கு இன்றி யமையாததாகக் காண்கின்றது. இவ்வாறே மங்கல வாழ்த்துக் காதையில் வருகின்ற பிற தனிச்சொற்களும் வேறு இடங்களில் வருகின்ற தனிச் சொற்களும் மிகவும் இன்றியமையாதனவாகி இப்பேரிலக்கியத்தைத் தடை படா வகையில் பீடு நடையுடன் நடத்திச் செல்கின்றன. என்னலாம். என்ருலும், இத்தனிச் சொற்கள் உரை நடையாகிய வாசகத்தின் இடையில் அ ைம வ ன போன்றே செல்கின்ற காரணத்தால், இவை உரையிடைப் பொருத்த முதல் வழியாக அமைந்து நின்றன என்று: கொள்ளலே மிகப் பொருத்தமானதாக அமைகின்றது. இவ்வாறே சிலப்பதிகாரத்தில் உரைநடை பல வகையில் பொருந்தி நின்று இச்சிலப்பதிகாரத்தை நடத்திச் செல் கின்றது. எனவே, நூல் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாய் அமைகின்றது. இச்சிலப்பதிகாரத்தில் உரை நடை வளர்ச்சி அடையவில்லை என்ருலும், இது தொல்காப் பியர் காலத்தில் இருந்து பின் எவ்வாருே மறைந்த இவ். வுரைநடை மீண்டும் தோன்றிய காலமாய் அமைந்து விட்டது. ஆயினும், தொடர்ந்து உரை கடையை வளர்த்ததான முயற்சி ஒன்றும் அக்காலத்தில் நாட்டில் நடைபெறவில்லை என்று தெரிகிறது. இதற்குப் பின் ஆறு ஏழு நூற்ருண்டுகள் கழித்து, எழுதப் பெற்ற இறையனர் அகப்பொருள் உரை நடையினேயே நாம் காண் கிருேம். இவ்வாறு தொல்காப்பியர் காலத்துக்கு முன் இருந்து. பின் தோன்ருது நின்ற உரைநடை சிலப்பதிகார காலத்தில் மறைவாகத் தோன்றி மறுபடியும் சில நூற்ருண்டுகள் கழித்தே வளர்ச்சியுற்றது என்று கொள்ளுதல் பொருத்த, மானதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/86&oldid=874774" இலிருந்து மீள்விக்கப்பட்டது