பக்கம்:தமிழ் உரை நடை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IV தமிழ் உரை நடையில் ஒரு மைல் கல் தமிழில் பழங்காலத்தில் உரை நடை இல்லை என்பார் தொல்காப்பியர் சூத்திரத்தையும் அதன் விளக்கங்களையும், அதன்பின் தோன்றிய சிலப்பதிகார உரைநடையையும் கண்டால், தம் எண்ணத்தை மாற்றிக்கொள்வர். ஆயினும், அச்சிலப்பதிகாரத்தில் காணும் சில உரை நடைத் தொடர் களுக்குப் பின் தமிழில் எந்த நூற்ருண்டில் உரை நடை வளர்ந்தது என்று சொல்ல முடியாத நிலையில் நாம் நிற் கிருேம். சிலப்பதிகாரம் கி. பி. முதல் நூற்ருண்டின் இறுதியிலோ, இரண்டாம் நூற்ருண்டின் தொடக்கத் திலோ எழுந்த நூல் என்பது பலருடைய துணிபு. அதற்குப் பிறகு சில நூற்ருண்டுகளில் தமிழ் நாட்டில் என்ன நடந்தது. என்ன நூல்கள் எழுதப் பெற்றன என அறிய முடியாதபடி இருண்ட நிலை நிலவியது. எனவே, அந்த இருண்ட காலத்தில் யார் யார் ஆண்டனர். யார் யார் வாழ்ந்தனர் என்பன சொல்ல முடியாதன. அந்த நிலையில் அவர்கள் எழுதிய நூல்பற்றி அறிவது எவ்வாறு? ஏழாம் நூற்ருண்டின் தொடக்கத்திலேதான் மறுபடி யும் நம்மால் தமிழகத்தைக் காண முடிகின்றது. அந்தத் தமிழகத்திற்கும் சங்ககாலத் தமிழகத்துக்கும் இடையில் எத்தனையோ வேறுபாடுகள் இருக்கின்றன. ஆயினும், அக்காலத்தில் உரை நடை இலக்கியங்கள் தோன்றி வளர்ந்தன என்பதற்குச் சான்றுகள் கிடையா. வேறு இலக்கியங்களும் வளர்ந்தன எனக் காட்டமுடியாவிடினும், இலக்கியமும் பிறவும் வேறு வகையில் வளர்ந்து வந்தன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/87&oldid=874775" இலிருந்து மீள்விக்கப்பட்டது