பக்கம்:தமிழ் உரை நடை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடையில் ஒரு ೧೦ು ಹನಿ 79 என எண்ண இடமுண்டு. ஏழாம் நூற்ருண்டின் இலக் கியங்களாகிய தேவாரம் போன்றவற்றிற்கும், சங்க இலக் கியத்திற்கும் உள்ள வேறுபாடுகளை யாவரே அறியார்' இந்த வளர்ச்சியில் வடமொழிவாணருக்கும், பிற வடநாட்ட வருக்கும் பங்கு உண்டு என்பதை லரலாறு காட்டும். பல வடசொற்கள் தமிழில் அதிகமாகக் கலந்துள்ளன. பாட்டிடை மட்டுமன்றி, உரையிடையும் வடசொற்களும், வடநாட்டுப் பழக்க வழக்கங்களும் மிகக் கலந்து வந்துள்ளன. இக்கால உரைநடையை விளக்கப் போதிய சான்றுகள் இலவாயினும், இறையனர் களவியல் உரை' ஒன்றே சிறந்த சான்ருய் கிற்கின்றது என்பது உண்மை 'யன்ருே? ஆம் இறையனர் களவியல் உரை தமிழ் உரை 'கடையில் ஒரு மைல் கல்லாய் கிற்கிறது. நூலுக்கு உரை எழுதும் பழக்கம் சங்ககாலத்தில் இல்லை. சங்ககால இலக்கங்களாகிய பத்துப் பாட்டுப் போன்றவற்றுக்கும், தொல்காப்பியத்திற்கும், சிலப்பதி காரத்திற்கும் மிகவும் பிற்காலத்திலேயே பல அறிஞர்கள் உரை எழுதியுள்ளார்கள். பாட்டுக்கு உரை என்ற வகையில் முதல் தோன்றிய உரை இறையனர் களவியல் உரையே எனக் கொள்ள வாய்ப்பு இருக்கின்றது. நாட்டு வரலாற்றை நன்கு ஆராய்வாருக்குக் கல்வி கிலே தொல் காப்பியர் - சங்ககாலம் - தொடங்கி வர வரக் குறைந்து கொண்டே வருகின்றது என கினைக்கத் தோன்றும். உரையே தேவையற்ற உயர்ந்த இலங்கியங்களைப் பாடியும் பயின்றும் வாழ்ந்த நிலை மாறி, எல்லாவற்றிற்கும் உரை எழுத வேண்டிய நிலை உண்டாயிற்று. அந்த உரைகளும் சில சமயத்தே உயர்ந்த நடையாய் அமைவதிலிருந்து அக்காலத் திலும் கற்றறிந்தவர் சிறந்திருந்தனர் எனக்கொள்ள இட முண்டு. உரை எழுதுவதால் பாட்டின் பொருள் நன்கு சிறக்கும் என்பது உண்மையே, என்ருலும், பாட்டுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/88&oldid=874776" இலிருந்து மீள்விக்கப்பட்டது