பக்கம்:தமிழ் உரை நடை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தமிழ் உரை நடை உரை இன்றிப் பயில முடியாத நிலையில் கல்வி சற்றுத் தாழ்ந்திருந்தமை உரைப் பெருக்கத்தால் விளங்கும். அவ். வுரைகளுக்கெல்லாம் முற்பட்ட உரை நூலே இறையனர் களவியல் உரை. - - - இறையனர் களவியல் உரை எழுதியவர் நக்கீரர் என்பர். அவரும் கடைச்சங்க காலத்தில் வாழ்ந்த நக்கீரரே என்பர். அக்கூற்றுச் சற்றும் பொருந்தா வகையில் உரை அமைகின்றது. நெடுகல் வாடை போன்ற இலக்கியங் களைப் படைத்த அந்த நக்கீரரா இந்த உரை எழுதியவர்? என்று கேட்கத் தோன்றுகிறது. உரை நடை வளமாகச் செல்கிறது என்ருலும், அதில் கலந்துள்ள வடமொழிச் சொற் பெருக்கமும், உதாரணப் பாட்டுக்க்ளாகிய பாண்டிக் கோவையும், நக்கீரரைப் பற்றிய சிறப்புரைகளும், பிறவும் நக்கீரர் காலத்துக்குப் பின் யாராலோ இவ்வுரை செப்பம் செய்யப்பட்டது என்பதைக் காட்டுகின்றன. நூல் வழி ஆராய்ந்து பார்த்தாலும் இவ்வுரை நக்கீரருக்குப் பின் பல கால்வழி கடந்து கடைசியில் ஒருவரால் எழுதி வைக்கப் பெற்றதென்பது நன்கு தெரியும். எனவே, நூலின் போக் கையும் அமைப்பையும், பிற இயல்புகளையும் நன்கு ஆய்ந்து கண்ட அறிஞர். இந்நூல் உண்டாகி உரை சொல்லப்பெற்ற காலம் நக்கீரர் காலமாயினும், இன்றைய வடிவில் இது அமைந்த காலம் எட்டாம் நூற்ருண்டே என அறுதி யிடுவர். ஒருமொழியின் கடை தூய்மையாய் இருக்கவேண்டும் என்ருல், அது பிற மொழிகளின் கலப்பற்றதாயிருக்க வேண்டும் என்றுதான் அனைவரும் கருதுகின்றனர். ஆயினும், அறிஞர் திரிகூட சுந்தரனர் அவர்கள் மிக 1. சுதேசமித்திரன் தீபாவளி மலர், பக். 182 (Nov. 58)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/89&oldid=874777" இலிருந்து மீள்விக்கப்பட்டது