பக்கம்:தமிழ் உரை நடை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரை நடையில் ஒரு மைல் கல் 83 கொண்டு வெளி வந்தது இவ்வுரை எனக் கொள்ளல் பொருந்தும். உரை கூறிய முதல்வர் நக்கீரராய் இருக்க, பின்வந்த அவர் உரைவழிப் புலவர்கள் அவருக்கும் நூலுக் கும் ஏற்றம் பல கூற அவற்றையும் சேர்த்து, இறுதியாக, வெளியிட்டவர் தம் கால கிலேக்கு ஏற்ப உரையை முடித்தார் எனக் கொள்ளல் வேண்டும். இவ்வாறு கொள்வது பொருத்தமானதே. எனவே, இதன் உரை யாசிரியர் நக்கீரர் என்பதும் பொருந்தும். இதன் ஆசிரியர் நக்கீரர் என்பது நூல் முதலில் நன்கு காட்டப்பெற்றுள்ளது. இது அக்கால உரைநடையையும் எடுத்துக்காட்டப் பயன்படுமாதலால், இங்கு எடுத்துரைத்து மேலே செல்லலாம். "அரசனும் எதிர் சென்று, என்ன? நூற்குப் பொருள் கண்டீரோ?’ என, அது காணுமாறு எமக் கோர் காரணிகனைத் தரல் வேண்டும், என, போமின் நுமக்கோர் காரணிகனை நான் எங்ங்னம் நாடு வேன்? நீ யி ர் நாற்பத்தொன்பதின்மர் ஆயிற்று, நுமக்கு, நிகராவார் ஒருவர் இன்மையின் அன்றே? என்று அரசன் சொல்லப் போந்து கன்மாப் பலகை ஏறி யிருந்து, அரசனும் இது சொல்லினன். யாம் காரணிகனைப் பெறுமாறு என்னை கொல்!” என்று சிந்திப்புழி, சூத்திரஞ் செய் தான் ஆலவாயின் அவிர் சடைக் கடவு ளன்றே? அவனையே காரணிகனைத் தரல் வேண்டும் எனச் சென்று வரங் கிடத்தும். என்று வரம் கிடப்ப, இடையாமத்து இவ்வூர் உப்பூரி குடி கிழார் மகன வான் உருத்திரசன்மன் என்பான், பைங் கண்ணன், புன்மயிரன், ஐயாட்டைப் பிராயத்தன், ஒரு மூங்கைப் பிள்ளை உளன்; அவனே அன்னன் என்று இகழாது கொண்டு போந்து, ஆசனத்தின் மேல் இரீஇக் கீழிருந்து குத்திரப் பொருள் உரைத்தால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/92&oldid=874781" இலிருந்து மீள்விக்கப்பட்டது