பக்கம்:தமிழ் உரை நடை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தமிழ் உரைநடை கண்ணிர் வார்ந்து ம்ெய்ம்மயிர் சிலிர்க்கும், மெய் யாயின உரை கேட்டவிடத்து, மெய்யல்லா உரை கேட்டவிடத்து வாளாவிருக்கும்: அவன் குமார தெய்வம்; அங்கோர் சாபத்தான் தோன்றினன்,' என முக்கால் இசைத்த குரல் அனைவருக்கும் உடன் பாடாயிற்று: ஆக, எழுந்திருந்து, தேவர் குலத்தை வலங்கொண்டு போந்து, உப்பூரி குடிகிழாருழைச் சங்கமெலாம் சென்று, இவ்வார்த்தை யெல்லாஞ் சொல்லி, ஐயனவான் உருத்திரசன் மனைத்தரல் வேண்டும். என்று வேண்டிக் கொடு போந்து, வெளியது உடீஇ, வெண்பூச் சூட்டி, வெண் சாந்து. அணிந்து, கல்மாப் பலகையேற்றிக் கீழிருந்து சூத் திரப் பொருள் உரைப்ப, எல்லாரும் முறையே பொருள் உரைப்பக் கேட்டு வாளா இருந்து, மதுரை மருதனிள நாகனர் உரைத்தவிடத்து ஒரோ விடத்துக் கண்ணிர் வார்ந்து, மெய்ம்மயிர் நிறுத்தி, பின்னர்க் கணக்காயனர் மகளுர் நக்கீரனர் உரைத்த விடத்துப் பதந்தொறும் கண்ணிர் வார்ந்து, மெய்ம் மயிர் சிலிர்ப்ப இருந்தான். இருப்ப, ஆர்ப்பெடுத்து, "மெய்யுரை பெற்ருேம் இந்நூற்கு என்ருர்.' - இவ்விளக்கம் நக்கீரரே உரையாசிரியர் என்பதைக் காட்டுகிறது. இத்துடன் உரை நடந்து செல்லும் விதத்தை யும் இதிலிருந்தே கண்டறியலாம். ஒரே தொடராக, ஒன்றை ஒன்று பற்றிச்செல்வது போன்று, சற்றுக் கடின கடையென இன்று அனைவரும் கூறும் வகையில் இவ்வுரை - கடை செல்லுகின்றது. - பாட்டிலிருந்து உரைநடைக்கு வந்த காலம் அது. பலரும் பாட்டை விரும்பிப் படித்திருக்கலாம். பாட்டு கடை உயர்ந்ததாய், அனைவருக்கும் எளிதில் விளங்காத தாய் இருந்தது. உரைநடையும் அந்த வகையில் எழுதி குற்ருன் சிறக்கும் என ஆசிரியர்கள் நினைத்திருக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/93&oldid=874782" இலிருந்து மீள்விக்கப்பட்டது