பக்கம்:தமிழ் உரை நடை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரைநடையில் ஒரு மைல்கல் 87. இன்பத்தின்பொருட்டு வந்தது என்னும் ஒருவன்: "அற்றன்று; அதனல் ஒரு பொருள் உரைப்பல்," என்னும் ஒருவன். அதனல் ஒரு பொருள் உரைப் பான் பக்கம் வலியுடைத்து. அஃதியாதோ எனின், களவு என்றற்குச் சிறப்புடைத்து என்றவாறு. ஊர் எனப் படுவது உறையூர், என்ற விடத்துப் பிறவும் ஊருண்மை சொல்லி, அவற்றுளெல்லாம் உறையூர் சிறப்புடமை சொல்லுப. இங்குப் பிறவும் கள வுண்மை சொல்லி, அக்களவுகட்கெல்லாம் இக்களவு சிறப்புடைத்து, சுவர்க்கம் வீடுபேறுகளை முடிக்குமா கலான், எனப்படுவது என்று சொல்லிச் சிறப் பிக்கப்பட்டது. அது பாயிரத்துள்ளும் உரைத் தாம். மற்று உலகத்துக் களவாயின வெல்லாம் கைகுறைப்பவும் கண் சூலவும் கழு வேற்றவும் பட்டுப் பழியும் பாவமும் ஆக்கி, நரகத் தொடக்கத் துத் தீக் கதிகளில் உய்க்கும். இது மேன்மக்களால் புகழப்பட்டு ஞான ஒழுகத்தோடு ஒத்த இயல்பிற்ரு கலானும், பழி பாவம் இன்மையானும், "எனப் படுவது என்று விசேடிக்கப்பட்டது.' (பக். 25) இனித் தலைமகள் - பலநூறு தோழியரோடு கூடி வாழ்ந்த தலைமகள் - எப்படித் தமியளானள் என்பதை உரை வழிக் காணல் நலம் பயப்பதாகும்: "யாங்ங்னம் நிற்குமோ எனின், சந்தனமும் சண்பகமும் தேமாவும் தீம்பலாவும் ஆசினியும் அசோகும் கோங்கும் வேங்கையும் குரவமும் விரிந்து, நாகமும் திலகமும் நறவும் நந்தியும் மாதவி யும் மல்லிகையும் மெளவலொடு மணங் கமழ்ந்து, பாதிரியும் பாவை ஞாழலும் பைங்கொன்றையும் பிணி யவிழ்ந்து, பொரிப்புன்கும் புன்னகமும் முருக் கொடு முகை சிறந்து, வண்டறைந்து தேர்ைந்து வரிக்குயில்கள் இசைபாட, தண்தென்றல் இடை விராய்த் தனியவரை முனிவு செய்யும் பொழிலது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/96&oldid=874785" இலிருந்து மீள்விக்கப்பட்டது