பக்கம்:தமிழ் உரை நடை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தமிழ் உரை நடை நடுவண், ஒரு மாணிக்கச் செய்குன்றின்மேல், விசும்பு துடைத்து, பசும்பொன் பூத்து, வண்டு துவைப்பத் தண்தேன் துளிப்பதோர் வெறியுறு. நறுமலர் வேங்கை கண்டாள்; கண்டு, பெரியதோர் காதல் களிகூர்ந்து, தன் செம்மலர்ச் சீறடிமேல் சிலம்பு கிடந்து சிலம்பு புடைப்ப, அம்மலர் அணிக் கொம்பர் நடை கற்பதென நடந்து சென்று, நறை விரி வேங்கை நாள் மலர் கொய்தாள்; கொய்த விடத்து, மரகத விளிம்பு அடுத்த மாணிக்கச் சுனை மருங்கினதோர் மாதவி வல்லி மண்டத்துப் போது வேய்ந்த பூநாறு கொழுநிழற்கீழ்க் கடிக்குருக்கத்திக் கொடி பிடித்துத் தகடுபடு பசும்பொற் சிகரங் களின் முகடு தொடுத்து வந்து இழிதரும் அருவி, பொன் கொழித்து, மணி வரன்றி, மாணிக்கத் தொடு வயிரம் உந்தி, அணி கிளிர் அருவி ஆடகப் பாறைமேல் அதிர் குரல் முரசின் கண்ணிரட்ட, வண்டும் தேனும் யாழ் முரல, வரிக்குயில்கள் இசை பாடத் தண் தாது தவிசுபடப் போர்த்ததோர் பளிக்குப் பாறை மணித்தலத்து மிசை, நீல ஆல வட்டம் விரித்தாற்போலத் தன் கோலக் கலாவம் கொள விரித்து, முளை இளஞாயிறு இளவெயி லெறிப்ப, ஒர் இளமயிலாடுவது நோக்கி நின்ருள்." (பக். 32) இனி, இருவயின் ஒத்தல் எவ்வாறு பொருந்தும்? என்பதை உரையாசிரியர் ஆராயும் திறனும், அதன் வழி அவர் தம் உரை நடையும் காணத்தக்கனவாகும்: 'இனி, இருவயின் ஒத்தல் என்பது என் சொல்லியவாருே எனின், புணராத முன் நின்ற அன்பு புணர்ந்த பின்னும் அப்பெற்றியே நிற்கும் என்றவாறு. "ஆயின், உலகிைேடு ஒவ்வாத பிற, உலகினிற் புணராத முன் நின்ற அன்பு புணர்ந்த பின்னர்த் தவிர்தலானும், உண்ணுதமுன் நின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/97&oldid=874786" இலிருந்து மீள்விக்கப்பட்டது