பக்கம்:தமிழ் உரை நடை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் உரை நடையில் ஒரு மைல் கல் 89. வேட்கை உண்ட பின் தவிர்தலானும் என்பது." என்ருற்கு, அறியாது சொல்லுதி! இவ்வுலகத்துள்ள பான்மை முன்னே கேட்டா யன்ருே? இல்லது இனியது நல்லது என்று புலவரால் நாட்டப்பட்டது என நூல் எடுத்துக் கோடற் கண்ணே சொல்லிப் போந்து, இனி ஒருகால் உலகிைேடு ஒவ்வாதெனல் வேண்டுமோ?’ என்பது. ஆயின், உலகினுள் அன்பற்ருராக, புணராத முன்னின்ற அன்பு புணர்ந்த பின்னும் அப்பெற்றியே நிற்கும் எனின், புணர்ச்சியாயை பயம் இல்லையாம். பிற, உண்ணுத முன்னின்ற வேட்கை உண்ட பின்றையும் தவருது அப்பெற்றியே நிற்குமாயின் உண்டதனைய பயம் இல்லை. அதுபோல, என்ருற்கு, அதுவன்று: புணராத முன் நின்ற வேட்கை புணர்ச்சியுட் குறை படும்; அக்குறை பாட்டைக் கூட்டத்தின் கண் தம்முட்பெற்ற செய்குணங்களாயை அன்பு நிறை விக்கும்; பின்னும் முன்னின்று அன்பு கூட்டத்திற் குறைபடும். அதற்கு இடையின்றியே குணத் தினைய அன்பு நிறைவிக்கும்; நிறைவித்த பின் முன்னின்ற அன்பு கூட்டத்திற் குறையாது - எஞ்ஞான்றும் ஒரு பெற்றியேயாய் நிற்கும் என்பது." (பக். 38) ஒன்றற்குப் பல பொருள் காட்டி முறை நிறுத்தி நல்ல உரைநெறியால் விளக்கும் வகையினையும் காணலாம்: ' உள்ளத் துணர்ச்சி என்பது யாதோ?” எனின், கூட்டம் உண்மை உணர்ந்த உணர்ச்சி என்றுமாம்; அல்லது உம், அவர் இக்குறை இன்றி யமையார் என உணர்ந்த உணர்ச்சி என்றுமாம்; அல்லதுரஉம், 'யான் குறையுற இவள் இதனை ஆற்றுங் கொல்லோ!' என உணர்ந்த உணர்ச்சி என்றுமாம்; அல்லது உம், என்னிைைய கூட்டம் முடியாது விடின், இவன் இறந்து படுமாகலான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/98&oldid=874787" இலிருந்து மீள்விக்கப்பட்டது