பக்கம்:தமிழ் உரை நடை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 90 தமிழ் உரை நடை இவனைக் குறை நயப்பித்துக் கொண்டு முடிக்கலாங் கொல்லோ என உணர்ந்த உணர்ச்சி என்றுமாம்.' (பக். 78-79). உடன் போக்குக் காலத்துத் தலைவியின் உள்ள நெகிழ் வினையும், கற்பு, நாண் இரண்டினைச் சீர்தூக்கி ஆயும் வகையினையும் உரையாசிரியர் தமக்கே உரிய நடையில் விளக்கிக் கொண்டு செல்லும் திறன் சீரிது: "அது கேட்டு, "ஆயின் உடன்போக்கு வலித் தேன்; நீ இதனை அவட்குச் சொல்ல வேண்டும்,' என, நன்று, எம்பெருமான் அருளிச் செய்தது எம்பெருமாட்டிக்கு உணர்த்துவல், என்று, தலை மகனை வலங்கொண்டு போந்து, தலைமகளுழைச் சென்று, அவள் குறிப்பறிந்து, எம்பெருமாட்டி, நம்பெருமான் நம்மைத் தம்மோடு உடன் கொண்டு செல்லக் கருதுகின்ருர். நின் குறிப்பு என்ன?” என்னும்; என்றவிடத்து உடன்படுதலும் உடன் படாதொழிதலும் என இரண்டல்லதில்லை: சென்று வழிபடுமேயெனின், நாணிலளாயினுளாம்; உடன் படாளாயின், கற்பிலளாயினுளாம்: இரண்டி னுள்ளும் எத்திறத்தளாயினளோ எனின், நானுக் கற்பு என்னும் இரண்டல்லவே அவள் கண்ணுடை யன? அவற்றுள் நாணிற் கற்பு வலியுடைத்து: ‘என்னை வலியுடையவாறு?’ எனின், ' உயிரினுஞ் சிறந்தன்று நாணே, நாணினும் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்று ' என்பவாகலான், நாண் அழியினும் கற்பு அழியாமை நினைக்கும்; நினைத்து, உடன் போக்கு நேர்ந்து, தலை சாய்த்து நிலங் கிளையா நிற்கும் நிலைமை இது சொல்லுவது போன்றது.' (பக். 120, 121)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_உரை_நடை.pdf/99&oldid=874788" இலிருந்து மீள்விக்கப்பட்டது