பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 த. கோவேந்தன்

அத்தகைய இயல்பு விளங்கிய காலத்தை அங்ங்னம்’ என்ற வழக்குக் குறிக்கின்றது. இதன் பயனாக ‘ங்’ என்ற உயிர்மெய்யும் சொற்களில் வழங்குவதாகி, அதே நிலையில் வரக்கூடிய 'க',முதலிய பிற ஒலிகளினும் (அங்ங்னம்-அங்கனம்) வேறுபடுவதால் ‘ங்’ என்பதனைத் தனி ஒலியன் என்றே இன்று கொள்ளுதல் வேண்டும் வினைமுற்று விகுதி வடமொழியில் "திங்' என வழங்குவதனைத் தமிழ் வழக்கிற்கேற்ப உகரச் சாரியை தந்து திங்ங் என்று தமிழில் பிரயோக விவேக நூலார் பயன்படுத்துகின்றார் "திங்ந்தம் என்பதும் அந்நூலில் வரும் சொல்லாம் பேச்சுத் தமிழில் சிலபோது, ங்கரத்தின் பின் வரும் ககரம் பிற உயிர்களோடு சேர்ந்து வரும்போதும் சிங்கவி (சிங்கி), எங்ங்ே (எங்கே), முதலியவாக ஒலிப்பதால், எழுத்து வடிவில் எழுதப் பெறாமற் போனாலும், ங்கரம் பிற உயிர்களோடும் தமிழில் ஒலித்து வரக் காண்கிறோம் அங்ங்னம்’ என எழுதப்பெறும்பொழுது இரண்டு ங்கரமாக எழுதப் பெற்றாலும், ஒலிக்கும்பொழுது ஒருங்கரந்தான் ஒலிக்கக் கேட்கிறோம் விரைந்தும் நெகிழ்ந்தும் ஒலித்து வரும் தமிழ் ஒலிப்பு முறையின் விளைவாகும் இது முன்னாளில் உள் நாக்குக்கு அருகில் ஒலித்துவந்த இவ் வொலி இப்பொழுது மெல்ல வல்லண்ணத்துக்கு அருகாக ஒலித்து வருகிறது பொருள் :

‘ங்’ என்பது மரக்கால் அல்லது குறுணி என்பதன் அறிகுறியாகக் கல்வெட்டுக்களிலும், பிற எழுத்துக் களிலும் வழங்கி வருகின்றன வடிவம் :

இந்த எழுத்தின் வடிவம் மாறிவந்த வரலாற்றைக் கீழே காண்க :