பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9




மொழிக் குடும்பம்

ஆங்கிலம் , சமற்கிருதம்: இரண்டு மொழிகளை ஒப்பிட்டுப் பார்த்து, அவைகளின் சொற்களின் ஒலியிலும் உருவத்திலும் ஒற்றுமையைக் கண்டால், நாம் பின் வரும் முடிவுகளில் ஒன்றுக்கு வரலாம்:

1. ஒன்று மற்றொன்றிலிருந்து பிறந்திருக்கலாம்

எடுத்துக்காட்டு : இந்தி வடமொழியிலிருந்து பிறந்திருப்பது.

2 ஒன்று மற்றொன்றிலிருந்து சில பண்புகளைக் கடன் வாங்கியிருக்கலாம்

எடுத்துக்காட்டு : ஆங்கிலம் இலத்தீனிலிருந்து கடன் வாங்கியிருப்பது

3 இரு மொழிகளும் ஒரு பொதுத் தாய்மொழியிலிருந்து பிறந்திருக்கலாம் (எ.கா.) ஆங்கிலம், செர்மன் மொழி பொதுத் தாய்மொழியிலிருந்து பிறந்திருப்பது

இறுதியில் கூறிய வகையில் சேர்ந்த இரு மொழிகளும் ஒரே மொழி வருக்கத்திலிருந்து பிறந்திருப்பதாகக் கூறலாம். மேலும் ஆராய்ந்து ஒருமொழி வருக்கத்திற்கும், வேறு மொழி வருக்கத்திற்கும் உள்ள தொடர்புகளைக் கண்டால், இரு மொழி வருக்கங்களும்