பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 த. கோவேந்தன்

வெட்டும் இச்சித்திர எழுத்துக்கள் சின்னங்களை அழகு படுத்தவும் உதவின.

பொதுவாக எகிப்தியர் வலப் பக்கமிருந்து இடப் பக்கமாகவே எழுதினர் ஆயினும் சில வேளைகளில் இடப்பக்கமிருந்து வலப்பக்கமாக எழுதுவதுமுண்டு சில சமயங்களில் இருபுறமும் ஒன்றுபோல் காண்பதற்காக இரண்டு முறையிலும் எழுதுவர் எந்த முறையில் எழுதினாலும் சித்திரங்கள் எப்போதும் வரிதொடங்கிய பக்கத்தைப் பார்த்தே எழுதப்பெறும் சில கல் வெட்டுக் களில் நேர்குத்தாகவும் வெட்டுவதுண்டு

எழுதும் வழக்கம் பரவி வந்தபோது எகிப்தியர் எளிதில் கொண்டுபோகக் கூடியதாகவுள்ள ஒரு பொருளில் எழுத விரும்பினார்கள் பப்பைரரு என்னும் ஒருவகை கோரைத்தண்டின் மெல்லிய கீற்றுக்களை ஒன்றாக வைத்து அழுத்தி ஒட்டி ஒரே பாய்போல் செய்து உலரவைத்து அதன்மீது எழுதலாயினர் நாணலைக் கூர்மையாகச் செதுக்கி எழுதுகோலாகப் பயன் படுத்தினர் எழுதுவதற்குச் சிவப்பு மையும், கறுப்பு மையும் உண்டாக்கப்பட்டன . சிவப்பு அல்லது கறுப்புச் சாயப் பொடியைக் கோந்து நீரில் கலந்து மைகள் தயாரிக்கப் பட்டன. வாணிகக் கடிதங்களிலும், இலக்கிய நூல்களிலும் தலைப்புக்களை எப்போதும் சிவப்பு மையினாலே எழுதினர். சாதாரண மக்கள் எழுதுவ தில் சிவப்பு மை பயன்படுவதில்லை பப்பைரஸைப் போலவே தோலும் பலகையும் பயன்பட்டதுண்டு

பப்பைரஸைப் பயன்படுத்தத் தொடங்கியபோது கல்லில் வெட்டிய சித்திர எழுத்துப் பயன்படாது என்று கண்டனர். கல்லில் வெட்டுவதுபோல் பப்பைரஸில் எழுதவேண்டுமாயின் மிகுந்த நேரமும் சிரமமும் தேவைப்படும்.

4. அதனால் சித்திர எழுத்தை ஒட்டி (Cursive) எழுதி

எளிதாக ஆக்கினர். இந்த முறையைப் பெரிதும்