பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

†14 த. கோவேந்தன்

கிரந்தம் : தமிழ் நாட்டில் வடமொழியை எழுது வதற்குப் பழைய காலம் முதல் வழங்கி வந்த எழுத்து கிரந்தம் எனப்படும் வடமொழியில் கிரந்தம் என்னும் சொல் நூலைக் குறிக்கும். வடமொழி நூல்களை எழுதுவதற்கு ஆண்ட எழுத்தையும் தமிழ் மக்கள் கிரந்தம் என்றே குறித்து வந்தார்கள் போலும். இது வடமொழிச் சாசனங்களையும் தமிழ்ச் சாசனங்களில் வரும் வட மொழிச் சொற்களையும் எழுதப் பயன்பட்டு வந்தது

ஒருகாலத்தில் இது தென்னிந்தியா முழுவதும் வழக்கில் இருந்தது இதே எழுத்துத்தான் சில மாற்றத் தோடு ‘ஆரிய எழுத்து’ என்ற பெயரில் மலையாள எழுத்தாக அமைந்தது துளு எழுத்தும் கிரந்தத்திலிருந்து உண்டானதே மலையாளமும் துளுவும் தனி எழுத்துக் களாக அமைந்த பின்னர், கிரந்தம் தமிழ்நாட்டில் மட்டும் வழங்கிவருகிறது இப்போது தேவநாகரி எழுத்து வழக்கில் வரவரக் கிரந்தம் மறைந்து வருகிறது

தமிழும் கிரந்தமும் பார்வைக்கு ஒரே விதமாகத் தோன்றும் உ, ஊ, க, ண, த, ந, ய, வ ஆகிய எழுத்துகள் இரண்டுக்கும் பொது அ, ஆ, ஈ, ஆ, ஈ, ஓ, ஒள, ட, ர, ல, ள என்னும் எழுத்துகளுள் காணும் வேறுபாட மிகவும் குறைவு இரண்டிலும் உள்ள மற்ற எழுத்துகளும் ஒன்றை ஒன்று ஒத்தே உள்ளன. அதனால் இப்போது வழக்கில் உள்ள தமிழ், கிரந்தம் ஆகிய இருவகை எழுத்துக்களும் ஒன்று எனவே கொள்ளலாம்

இடப்புறத்திலிருந்து வலப்புறம் செல்லும் ஒரே கோட்டால் எழுதப்பெறும் இவ்வகையும் தமிழைப் போலவே வலமாகவே செல்லுவது அதனால்தான் இடமாகச் செல்லும் தெலுங்கு கன்னட எழுத்துகளைப் போல் அதிகமாகச் சுழிகளையும் வட்டங் களையும் பெறவில்லை நேர்கோடுகளும் கோணங்களும் காணப் படுகின்றன