பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 117

மற்ற எழுத்துக்களைப் போலவே கிரந்தமும் பிராமியிலிருந்து வளர்ந்து தனிவகையாக மாறியதே எனினும் இவ்வகையில் பொறிக்கப்பட்டுள்ள சாசனங்கள் பல்லவ அரசனான மகேந்திரவர்மனுடைய காலத்திலிருந்து அதாவது கி.பி. ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்துதான் கிடைத்துள்ளன. அதற்கு முற்பட்டனவாகத் தமிழ் நாட்டில் கிடைப்பவை அசோக மன்னன் கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்களைப் போன்ற பிராமி எழுத்துக்களில் உள்ளவை இடைப் பட்ட காலத்தில் பிராமியிலிருந்து கிரந்தம் பிரிந்து, தனி வகையாக வளர்ந்த வரலாற்றை ஆந்திரதேசத்தின் பகுதியான வேங்கி நாட்டில் கிடைக்கும் சாசனங் களிலிருந்து அறிந்துகொள்ளலாம். ஆனாலும் அவற்றைக் கிரந்தம் என்று குறிப்பதில்லை.

தமிழ் நாட்டில் கிடைக்கும் கிரந்த எழுத்துக்களின் வரி வடிவ வளர்ச்சியைப் பின்வரும் படம் எடுத்துக் காட்டும்.

முதல் இரண்டு பத்திகள் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முதற்பாகத்தைச் சார்ந்தவை பல்லவ மகேந்திர வர்மன் கல்வெட்டுக்களில் காணும் எழுத்துக்களைக் காட்டுவன. ஆயினும் இரண்டும் இருவகைப்பட்டவை. முதற் பத்தியில் உள்ளது சாதாரண எழுத்து. இரண்டாம் பத்தியில் காண்பது சித்திரித்த வகை.

பத்தி1. மண்டகப்பட்டு, தளவானூர், மகேந்திரவாடி, சீயமங்கலம் கல்வெட்டுக்கள். r

பத்தி 2. திருச்சிராப்பள்ளி மலைக்கோயில் கல்வெட்டுக்கள்.

பத்தி 3. வாதாபிகொண்ட நரசிம்மவர்மன், முதலாம் பரமேச்வரவர்மன் ஆகியோருடைய மாமல்லபுரம் தருமராஜா ரதக் கல்வெட்டுக்கள். 7ஆம் நூற்றாண்டின் மன்றாம் பாதம் இதுவும் சித்திரித்த வகை.