பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 த. கோவேந்தன்

இன்னும் பெரியதொரு மொழி வருக்கத்திலிருந்து தோன்றியிருப்பதாக நினைக்கலாம் இவ்விதம் பழைய இந்திய, கிரேக்க, இலத்தீன், கெல்ட்டிக், செர்மானிய மொழிகளை ஒப்பிட்டு ஆராய்ந்து மொழி யாராய்ச்சி யாளர்கள் பல்வேறு மொழிகளுக்கும் முன்னால் ஆதாரமாக உள்ள இந்தோ ஐரோப்பிய மொழி ஒன்று இருந்திருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார்கள் அந்த மிகப் பழைய மொழியைப் பேசிய மனிதர் களைப்பற்றி நமக்குப் பெரும்பாலும் ஒன்றும் தெரியாது ஆனால் அவர்கள் ஒரே இனத்தைச் சார்ந்தவர்களாக (ஆரியரையோ, காக்கேசியரையோ அல்லது வேறு எந்த ஒரு தனிப்பட்ட இனத்தவரையோ சேர்ந்தவர்களாக) இருந்திருக்க முடியாது என்று மாத்திரம் நினைக்க இடமிருக்கிறது மேலும் பதி னாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வடக்கு அல்லது கிழக்கு ஐரோப்பாவில் அவர்கள் ஒன்றுகூடி வாழ்ந்தி ருக்க வேண்டுமென்றும் தோன்றுகிறது

இந்த ஆதார மொழி எவ்வாறு தனித்தனி மொழி களாகப் பிரிந்தது? இவ்வாறு பிரிந்த மொழிகள் எப்படி ஒன்றுக்கொன்று தொடர்புற்றிருந்தன? என்பவை இந்தோ ஐரோப்பிய மொழியாராய்சியில் மிகவும் சிக்கலானவை இந்த ஆதார மொழியைப் பேசிய மக்கள் இரண்டு பெரும்பகுதிகளாகப் பிரிந்து ஒரு பிரிவினர் கிழக்கேயும், மற்றொரு பிரிவினர் மேற்கேயும் பரவி யிருக்கவேண்டுமென்று ஒரு காலத்தில் மொழி ஆராய்ச்சியாளர்கள் எண்ணினார்கள் அவர்கள் இவ்வாறு பரவிக்கொண்டிருக்கும் பொழுது தங்களு டைய பொது மொழியைத் தாங்கள் தங்கிய இடத்திற்கு உகந்தவாறு மாற்றிப் பேசியிருக்க வேண்டும். இவ்வாறு பொதுமொழி வேறுபட்டு, நாளடைவில் பல தனி மொழிகளாகப் பிரிந்து வளர்ந்தது இத் தனிமொழி களும் நாளடைவில் பல கிளைகள் விட்டுச் செழித்து வளர்ந்தன. இந்த முறையை வமிசாவளிப் படத்தின்