பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$34 த. கோவேந்தன்

ஞ்

தமிழ் நெடுங்கணக்கில் நான்காவது மெய்யாக வருவது இது ‘ஞ்’ என்பது மெய். அகரஞ் சேர்ந்து ‘ஞ்’ என இதனைக் குறிப்பது பழைய வழக்கம்; இகரத்தை முன்னே வைத்து இஞ்’ என்று ஒலிப்பது இன்றைய வழக்கம் மூக்கொலியும் வாயொலியோடு சேர்ந்து வருதலின் இது மெல்லெழுத்தாம் 'ச' என்பதை ஒலிப்பதுபோல் ஒலிக்கும்போது குரல்வளையிதழ் அசைவதால் எழும் ஒலிப்பும் மூக்கின்வழியே வரும் ஒலியும் சேரும்போது எழும் ஒலியே ஞ’ என்ற மெல் லெழுத்தாம் அப்போது மெல்லண்ணம் கிழிறங்கும்; வாய்க்கும் மூக்குக்கும் உள்ள வழி திறக்கும்; குரல் வளையில் இதழ் துடிக்கும்; நாக்கின் முனையல்லாத முற்பகுதி வல்லண்ணத்தோடு ஒட்டும்; இங்கே வெடிப் பொலியிற் போலச் சட்டென நாக்கை எடுக்கவேண்டிய தில்லை. இது தொடர்ந்தொலிக்கும் ஒலியாகவும் வரலாம் தமிழில் இன்று ஒலிக்கின்ற முறையில், வாயில் சகரத்திற்குச் சிறிது பின்னாகவே ஞகரம் எழுந்து ஒலிக்கின்றது. ஆனால், சொல்லில் சகரம் பின்வர இது முன்வந்து, அதனோடு ஒன்றாக இயைந்து, மஞ்சு முதலியவற்றிற்போல ஒலிக்கும்பொழுது, சகரம் போலச் சிறிது முன்வந்தே ஞகரம் ஒலிக்கின்றது.

மொழிக்கு முதலில், ஞகரம் தன்பின் உயிர்வர ஒலிப்பதன்றித் தனி மெய்யாகத் தமிழில் வருவதில்லை தொல்காப்பியர் இவ்வாறு ஞகரத்தோடு மொழிக்கு முதலில் வரும் உயிரெழுத்துகள் ஆ எ, ஒ என மூன்றே கூறுகின்றார். நன்னூலார் அ என்பதனையும் கூட்டுவார்.