பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 135

'Dமிறு’ என்பதில் இகரமும் வருகிறது. இது புறநானூற் றிலும் வருகின்ற சொல் எனவே இ என்பதனையும் சேர்த்தல் வேண்டும். வடமொழித் தொடர்பால் ‘ஞேயம் முதலியவை தமிழில் வந்து வழங்குவதால் ‘ஏ’ என்பதனையும் சேர்த்துக்கொள்ளுதல் வேண்டும் 'ஜ்ளு’ என்ற வடமொழிக் கூட்டெழுத்து, தமிழில் ‘ஞ’ என வரும்

‘ஞ’ என அகரத்துடன் தொடங்கும் சொற்கள் தமிழில் பதினான்கு (தமிழ் லெக்சிக்கன்). இவற்றில் வடமொழிச் சொற்களை விட்டுவிட்டால் ‘ஞ’ என்பது சில இடங்களில் ‘ந்’ என்பதன் போலியாக வருவ தனையும் ஞெ’ என்று சில இடத்தில் ஒலிப்பன ‘ஞ’ எனச் சில இடங்களில் ஒலிப்பதனையும் காண்போம் இதனாலேயே தொல்காப்பியர் மொழிக்கு முதலில் வரும் ஞகரத்தோடு அகரம் வரும் எனக் கூறவில்லை

தமிழில் ஞா எனத் தொடங்கும் சொற்கள் நூற்றெழுபத்திரண்டு வந்துள்ள (தமிழ் லெக்சிக்கன்) இவற்றிலும் பல வடமொழிச் சொற்களாம்; ந என்பதன் போலியாகவும் ய என்பதன் போலியாகவும் வரும் ஞகரம் பலவாம். நூற்றுப்பதினொரு சொற்கள் ஞானம் என்று தொடங்கு கின்றன. ஞாபகம் என்பதோடு தொடர்புடையவை ஏழு. ‘ஞாயம்’ என்பதும் வடமொழிச் சொல்லாம் இவற்றை யெல்லாம் விட்டு விட்டால் ஞா எனத்தொடங்குவன சிலவே ஆம் தமிழில் ‘ஞ என்பதில் தொடங்குவன நான்கு சொற்களே ஆம் இவற்றில் ஒன்று நி’ என்பதற்குப் போலியாக D’ வருஞ்சொல், மற்றவற்றில் இமிர் என்ற ஒலியைக் குறிக்கும் சொல்லே, முதலிலும் ‘ஞ்’ என்ற மெல்லொலி பெற்றுவரக் காண்கிறோம் இ’ என்று பிறக்குமிடத்தில் எழும் மெல்லொலி ஞ’ என்பதே ஆதலால் இமிர்’ என்பதில் இ என்பது தன் பின்வரும் மெல்லொலிச் சாயல் பெற்று ஞ் என்றே தொடங்கி வருகிறது