பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 த. கோவேந்தன்

தொல்காப்பியர் காலத்தில் இவ்வாறு மெல்லொலி மொழிக்கு முதலில் வாராமையால் ஞகரம் இகரத்துடன் மொழிக்கு முதலாகும் என்று அவர் கூறவில்லை அன்று, Dமிர் என்பது இமிர் என்றே வழங்கி இருக்கவேண்டும் ‘ஞெ’ என்பதில் தொடங்கு வன தமிழில் முப்பத்தேழு சொற்கள். ஞெ என்பதில் தொடங்குவன ஐந்து, ஞொ என்பதில் தொடங்குவன ஞொள்கு என்ற வினையும், ஞொள் என்ற ஒலிக் குறிப்புமாகிய இரண்டே ஆம் (தமிழ் லெக்சிக்கன்) தமிழில் பிறஉயிரோடு ஞகரம் வருவதனைக் காணோம். ‘ஞ்’ என முடியும் சொல் தொல் காப்பியர் காலத்திலும் ஒன்றேயாம். இந்த உரிஞ்’ என்பதும், பிற்காலத்தே வழக்கு ஒழிந்தது. இது பின்னாளில் உரினு, உரிஞ்சு, உராய்ஞ்சு என்றெல்லாம் மாறியது. 'நகரம்’ ஞகரமாக மாறும் போக்கு சங்ககாலத்திலிருந்து தேவார காலம் முடிய வளர்ந்தது, பின் மறைந்து,பின்னர் ஞகரம் நகரமாக மாறும் போக்கு வளர்ந்தது, சேலம் முதலிய இடங்களில் இவ்வாறு நகரம் ஞகரத்தின் இடத்தைப் பெற்று வழங்கக் காண்கிறோம் எனவே அங்கு ஞகரமே இல்லை. முன்னிலையைக் குறிக்கும் அடிப்படை மெய்யெழுத்தாக 'ந' என்பதனைக் கருதுவர். “உன்னுடைய தாய்” என்ற பொருளில் ஞாய்’ என்ற சொல் குறுந்தொகையில் வழங்குவதால் அக்காலத்தில் இந்த நகரம் ஞகரமாய் வழங்கியமை விளங்குகிறது. யா என்பது மெல்லெழுத்தின்பின் ஞா எனத் தொல்காப்பியர் காலத்தில் மாறியது; பொன் யாத்த = பொன் ஞாத்த எனப் பின்வரும் மெல்லெழுத்தின் சாயல் பெற்றது எனலாம் யாழ் ஞாழ் என வழங்குவதும் உண்டு மஞ்சு என்பதிற்போல மொழிக்கு இடையே உயிர் எழுத்தோடு வந்து ஒலிக்கும் சகரத்தின் முன் ஞ் வந்து ச என்பதன் ஒலியை ஜ என்றாக்கும்.

ஞ என்பதன் பின் இவ்வாறு சகரமே அன்றி யகரமும் வரும்; பிற வாரா. அஞ்ஞானம் முதலிய இடங்