பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 த. கோவேந்தன்

மொழிகளில்-ஒரு சொல்லை எந்த அசையிலும் ஊன்றிச் சொல்லலாம் இரண்டாவது வருக்கத்தில்-ஜெர்மானிய லத்தீன், கெல்ட்டிக் மொழிகளில்-ஒவ்வொரு மொழி யையும் அதன் ஒரு குறிப்பிட்ட அசையில் தான் ஊன்றி உச்சரிக்கலாம். மிகப்பழைய செர்மானியமொழியில், பெரும்பாலும் அநேகமாக எல்லா மொழிச் சொற் களையும், அவைகளின் மூல அசைகளிலேயே ஊன்றிப் பேசினார்கள். இதன் பயனாகப் பல பெரிய மாறுதல்கள் ஏற்பட்டன மூல அசைகளில் ஊன்றிச் சொன்ன சொற்களில், இலக்கண உருபுகள் சிதைந்தன மேலும் மெய்யெழுத்துக்கள் உச்சரிப்பில் மாறியதைக் கிரிம் (Grimm), வர்னர் (Vernel) இவர்கள் காட்டியுளர் இந்த மாறுதல்களை ஜெர்மானிய மொழிகளாகிய ஆங்கிலம் முதலிய மொழிகளில் காண்கிறோம்

ஜெர்மானிய மொழிகளில், வினைச்சொல் இறந்த காலத்தைக் குறிக்க-(e)d என்ற அசைச் சொல்லுடன் வழங்குகிறது (Lowe, Loved Loved) இதுவும் ஜெர்மானிய மொழிகளினிடையே காணப்படும் ஒரு முக்கியமான அம்சம்

ஆனால் இந்திய ஈரானிய மொழி வருக்கங்களில், சொற்களை எந்த அசையிலேனும் அழுத்திச் சொல்ல லாம் இம் மொழிகளில் 'க' வருக்கம் “ச” வருக்கமாக மாறுவதும் காணப்படுகிறது (எ.கா.) இலத்தீன் : க்வெ+வடமொழி ச+கிழக்கு இரானிய ச.

இந்தப் பிரிவு சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்பட்டிருக்க வேண்டும் பழைய இந்திய மொழியின் மிகப் புராதனமான உருவத்தை நாம் இருக்வேதப் பாசுரங்களில் (கி. மு 1500) காணலாம் பழைய இந்திய மொழியின் மற்றொரு பகுதியிலிருந்து சமற்கிருதமும் பிராகிருதமும் பிறந்தன பிராகிருதத்திலிருந்து இந்துரு தானத்தில் புதிய மொழிகள் உண்டாயின