பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 139

இது தமிழ் நெடுங்கணக்கில் ஐந்தாவது மெய்யெழுத்தாம். மெய்யெழுத்தை வழங்குகிற முறையை முன்னைய மெய்யெழுத்துகளைப் பற்றியெழுதிய பொழுது குறிப்பிட்டோம் டகரத்தை மூர்த்தாட்சரம் அல்லது தலையொலி என்பர் வடமொழியாளர் நாவின் நுனி பலவாறு இயங்கும் வகையில் அமைந்துள்ளது. அதனால் நாதுனியெழுத்துகள் பலவகையாகும் இவை அண்ணத்தைத் தொடுமிடம் வெவ்வேறாதற்கிணங்க வெவ்வேறு ஒலிகள் பிறக்கும் பல்லையோ பல்லின் வேர். அடியையோ தொடுவதால் பிறப்பன பல்லெழுத்துகள் ஆம். பல்லின் வேருக்கும் அப்பால் மேலிடத்தில் ஈறு பிதுக்கமாய்ப் புறக்குவிவாக வருமிடம் உண்டு. வல்லண்ணம் உட்குழிவாக இருப்பது நீங்கி இப்படிப் புறக்குவிவாக முடியுமிடத்தை நாதுனி தொடப் பிறக்கும் ஒலிகள் பல்லீற்றொலிகளாம்.

இவ்வாறு நாதுனியால் பிறக்கும் எழுத்துகளை உயரப் பிறக்கும் ஒலிகள் என்றும் தாழப்பிறக்கும் ஒலிகள் என்றும் இருகூறாகப் பிரிப்பதும் உண்டு இந்த வேற்றுமை இன்றைய தமிழில் அடிப்படையாக வரக்காண்போம் உயரப்பிறப்பன வல்லண்ணம் உட் குழிவாக இருக்கும் இடத்தைத் தொட்டுப் பிறப்பனவாம். நாவெழுத்துகள் என்றும் நாமடி எழுத்துகள் என்றும் இரண்டாகப் பிரிக்கலாம். தொடுமிடத்தை நோக்காது நாநுனி அல்லது நாதுனியோரம் வல்லண்ணத்தைத் தொடுவதால் எழும் ஒலிகள் நாவொலிகளாம். நாவின் துனி மடியும்பொழுது அதன் கீழ்ப்புறம் வல்