பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 141

கால்டுவெல், “மொழி முதலிலும் இரட்டிக்கும் போதும், ஒலிப்பிலா ஒலியாகவும், உயிரிடையிலும் மெல்லெழுத்தின் பின்னும் ஒலிப்புடை ஒலியாகவும் வல்லெழுத்துக்கள் ஒலிப்பதே திராவிட மொழிகளின் அடிப்படையான இயல்பாக அவை தோன்றிய நாள் முதல் விளங்கிவருகின்றன” என்று கூறுவதனை முன்னரே குறிப்பிட்டோம் (பார்க்க: க).ட்க, ட்சட்ப, என வல்லெழுத்தின் முன்வரும் டகரம் மொழி முதல் டகரமே போலாம். இந்தப் பிரேகு ஆராய்ச்சியில் டகரம் நாமடி ஒலியாகத் தோன்றவில்லையாம் ஆனால் தனியே உச்சரிக்கும் போது இதனை நாமடி ஒலியாக இலக்கண ஆசிரியர்கள் ஒலிப்பதுண்டு. நாதுனி அண்ணத்தை ஒரு தட்டுத் தட்டிப் பிரியும் தட்டொலியாக இது விரைவில் ஒலிக்கும்போது மாறுவதும் உண்டு.

நாவானது அண்ணத்தைத் தொடுவதால் வாயில் இருவேறு அறைகள் முன்னும் பின்னும் எழுகின்றன. இவை ஒற்றொலிக்கும் அறைகள் ஆகின்றன எனவே இவை மாறுவது காரணமாக, ஒலியின் இயல்பும் மாறும் தாழ்விடத்து ஒலியும் உயரிடத்து ஒலியும் வேறுபடுவது இதனாலேயே ஆகும். உயர்விடத்து ஒலியில் தொடும் இடம் வல்லண்ணத்தின் உயரத்தே தோன்றுவதோடு நா முனையில் தொடும் இடமும் நாவின் மேற்புறத்து முழுதுமல்லாமல் நா நுனி மட்டுமாகவோ, நா நுனியின் அடிப் புறமாகவோ மாறுகிறது. அதனால் முன்புறமாக நாவின் குவிவளைவு எழுகிறது இங்கு நா விளிம்பு வீங்குதல் எங்கும் தோன்றவில்லை. பிற திராவிட மொழிகளில் காண்பதனைவிடத் தமிழில் டகரத்தின் தொடுமிடம் வல்லண்ணத்தின் உயரத்தே செல்கின்றது நாவின் துனியாகவும் மாறுகிறது.

பொருள் : டகரம் தமிழில் மொழிக்கு முதலாவது இல்லை. சில தெலுங்குச் சொற்களிலும் கன்னடச் சொற்களிலும் டகரம் மொழிக்கு முதலாக வரக்