பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 த. கோவேந்தன்

லகரத்தின் முன்னும் வரக் காண்கிறோம் ஈற்றிலே டகர மெய் தமிழில் வரும்போது குற்றியலுகரமும் முற்றியலு கரமும் பெற்றே வரக்காண்கிறோம் மூட்டுவாய் முதலிய இடங்களில் குற்றியலுகரச் சொல் சொற்றொடராக வரும்போது பேச்சு வழக்கில் மூட்வாய் என்பது போல ஒலிக்கின்றது இங்கே குற்றியலுகரம் காதில் விழாத அளவு மிகச் சிறியதாக ஒலித்து மறைகிறது எனலாம். பாட்லாக் முதலிய பிறமொழிச் சொற்களை ஒலிக்கும் போது இத்தகைய மிக நெகிழ்ந்த குற்றியலுகரமே ட் என்பதன் பின் ஒலிக்கிறதே அன்றிப் பிற இடையிசை ஒலி வருவதில்லை.

வடமொழிச் சொற்கள் தமிழில் வரும்போது அங்குள்ள நால்வகை டகரமும் ட என ஒன்றுபோலவே வரும்; ஷகரமும் (விஷம்=விடம்) ட என வரும். கூடி என்பது க்க (பகrம் = பக்கம்) என வருவது பழைய முறை r=ட்ச (பrவி=பட்சி) என வருவது பின்னைய முறை பிராகிருதச் சொற்களில் ந்ருத்தம்=நட்டம்; விருத்தம்= வட்டம் என தகரம் டகரமாகியவை தமிழில் வழங்கும் சைனர், பெளத்தர் முதலியோர் வழியே, வடமொழிச் சொற்கள் முதலில் பிராகிருத வடிவிலேயே தமிழில் புகுந்தன என்று கருத இடம் உண்டு.

தலையிற் பிறக்கும் மூர்த்தாட்சரங்களான ட, ண, ள முதலியன பழைய இந்திய ஐரோப்பிய மொழிகளில் இல்லாது பின் தோன்றியவை ஆம். பட்டணம்= பத்தணம் என்பது போலக் கூறினும் வடமொழியில் பெரும் பான்மையும் பொருள் மாறுவதில்லை பட்டு, பத்து என மாற்றிக் கூறினால் திராவிட மொழியில் பொருள் மாறும் டகர முதலியவற்றின் வழக்கு வட மொழியினைவிட அதற்கு மிகமிகத் தெற்கில் உள்ள தமிழிலே பெரு வழக்காம் எனவே திராவிட மொழி யோடு வட மொழி உடன் புழங்க வந்ததால் திராவிட மொழி பேசிய பழைய மக்கள் சிலர் வடமொழியைத்