பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 145

தாய் மொழியாகப் பேசவந்த காலத்தில் டகரம் முதலியவை இந்திய ஐரோப்பிய மொழியாம் வட மொழியில் புகுந்தது என்பர் பல அறிஞர். ஆனால், ர் முதலான எழுத்துகளின் பின் தகரம் டகரமாக மாறுவது இயல்பே. ஆதலின் மூர்த்தாட்சரங்கள் தோன்றும் போக்கும் வடமொழியில் இந்தியாவுக்குப் புகுமுன்னரே வளர்ந்தது என்று காட்டி இக் கொள் கையை மறுப்போரும் உளர். இயல்பாக எழக் கூடிய போக்குத் திராவிட மொழியினர் கூட்டுறவால் நன்றாக மலர்ந்து நிலைபேறுற்றது என்று கொள்வதே பொருத்த மாகும்.

தமிழில் டகரத்தின் ஒலிப்புமுறை மாறி இருக்கக் காண்கிறோம். வல்லெழுத்தான நாவொலிகள் தமிழில் மூன்று : த, ட, ற என்பன. இவற்றில் த அண் பல்லடி நா முடியுற வருவதாம். டகரம் நுனி நா அண்ணம் சேரப் பிறப்பதாம். றகரமோ நுனி நா அணரி (மேல் நோக்கி வளைந்து) அண்ணத்தைத் தொடுவதால் வருவதாம். எனவே மேற்புற நுனி நா ஒலியே டகரமாகும். வளை நா ஒலியே றகரமாகும். இது தொல் காப்பியத்தில் கண்டது. நுனி நா வல்லண்ணத்தின் நடுவைத் தொடுவது டகரம் எனத் தொல்காப்பியத்திற்குப் பொருள் கொள்வதற்கு இல்லை. "கடை நா கடை அண்ணம் சேர்வது க; இடை நா இடையண்ணம் சேர்வது ச நுனி நா நுனி அண்ணம் சேர்வது ட” என்றே பொருள் கொள்ளுதல் கூடும். பட்டணம் பத்தனம் என மாறியதற்கேற்ப, டகரம் ஒலித்த காலத்திற்கு இஃது ஏற்றதாகலாம்.

வட மொழியோடு மிக மிகப் பழகிய காலத்தில் வட மொழியில் மூர்த்தாட்சரம் என வளர்ந்த டகரத்தின் வளை நா ஒலியே தமிழிலும் வந்துவிட்டது போலும். இதனால் றகரம் பிறழ்ந்தொலிக்கத் தொடங்கியதனை அதன் வரலாற்றில் காண்போம்.