பக்கம்:தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் எழுத்தின் தோற்றமும் வளர்ச்சியும் 149

ଢୋ୪

இது தமிழ் நெடுங்கணக்கில் ஆறாவது மெய் எழுத்தாகியதுண் என்பதும் அகரமும் சேர்ந்தொலிக்கும் உயிர்மெய் யெழுத்தாகும் இது ஒலிக்கும்பொழுது ட ஒலிக்கும் இடத்தினும் உயர வரும் தொடுமிடங்கொண்டு ஒலிக்கிறது. இது தெளிவாக வல்லண்ண ஒலியென ஆராய்ச்சியாளர் கண்டார்கள் நாநுனி வளைந்து மடிந்து கீழ்ப்புறம் வல்லண்ணத்தைத் தொட்டு நிற்க இவ்வொலி எழுகிறதாம். ந, ன என்பன இன்று ஒலிக்கும் முறையில் தாழ் ஒலிகளாகும் ணகரம் உயர் ஒலியாகும். ல, ளு என்பனவும் முறையேஇவ்வாறு தாழ் ஒலியாகவும் உயர் ஒலியாகவும் வேறுபடுவன புணர்ச்சி வகையால் திரியும்போது முறையே ன ண என்று திரியும் எனவே பழங்காலத்தும் ண உயர் ஒலியேயாம் ஆனால் அன்று அது நாமடி ஒலியா என்பதே வினா தொல்காப்பியர் டகாரம் ணகார நுனிநா அண்ணம் என்றே கூறுகிறார். அவர் நுனிநா அணரி அண்ணம் ஒற்றுதலைக் கூற வில்லை ந, ன, ண என்பவற்றின் ஒலிப்பு வகை மாற்றம் வட மொழி மெல்லெழுத்தாம் மூர்த் தாட்சரங்களின் வழக்குத் தமிழில் பரவியதால் மயக்கம் ஏற்படவே இடைக் காலத்திலிருந்து தோன்றி இருக்கலாம்

தமிழில் ணகரம் மொழிக்கு முதலில் வருவதில்லை; உயிர்களினிடையே வரும்பொழுது அது தட்டொலி யாம் என்று பர்த் என்பார் கூறுவர் மிக விரைந்தும் செயற்கையாகவும் ஒலித்தாலன்றி ணகரம் பெரும் பான்மையும் தட்டொலி ஆவதில்லை. ணகரம் தமிழில் சொல்லின் ஒற்றில் வரும். ஆனால் மொழியின் ஈற்றில் மெய்யெழுத்துக்கள் பெரும்பான்மையும் வாராத நிலை தமிழில்படிப் படியாக வளர்ந்துள்ளதற்கேற்ப ணகரம் ஈற்றில் வரும்போது சில போது உகரச்சாரியை பெறுகிறது. கண்-கண்ணு. சில இடத்தில் தவிரப் பிற